ஒவ்வொரு எம்.எல்.ஏக்களாக பாஜகவில் இணந்து வருவது ஆளும் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.  

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் கட்சியை சேர்ந்த மம்தா பானர்ஜி முதல்வராக இருந்து ஆட்சி செய்து வருகிறார். அங்கு பாஜகவுக்கும், திணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் சுனில் சிங் பாஜகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தல் அறிவித்த தினத்தில் இருந்தே மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கு இடையே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. இதற்குப் பிறகு மக்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டு 18 தொகுதிகளை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியியைச் சேர்ந்த நவுபாரா சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினர் சுனில் சிங்கும்,12 கவுன்சிலர்களும் பாஜக மூத்த தலைவர்களான கைலாஷ் வர்கியா, முகுல் ராய் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.