அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு லண்டன் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் மூலம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் குணமடைய வேண்டி அதிமுக தொண்டர்கள் , சர்வ மதத்தினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
முதலமைச்சரை தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்கட்சித்தலைவர்கள் தேசிய தலைவர்கள் ராகுல் உள்ளிட்டோர் சென்று பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பாண்டிச்சேரி முதலமைச்சர் நாராயண சாமி இன்று வந்து பார்த்தார்.முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்கள்க்கு அவர் அளித்த பேட்டியில்
முதல்வர் உடல்நலம் பெற்று விரைவில் பணிகளை தொடர கடவுளை மனதார பிராதிக்கிறேன். உடல் நலம் முன்னேற்றம் அடைந்து வருவது குறித்து துணை சபாநாயக்கர் தம்பிதுரை ஒ. பன்னீர்செல்வம் மற்றும் விஜயபாஸ்கர் கூறினார்கள். விரைவில் குணமடைய புதுவை மக்கள் சார்பிலும் எனது சார்பிலும் வாழ்த்துக்கள். அன்னை சோனியா வழிகாட்டலின்படி காங்கிரஸ் கட்சியின் துனைபொதுச் செயலாளர் ராகுல் காந்தி வந்து நலம் விசாரித்து விட்டுச்சென்றார்.

பாண்டிசேரி மக்கள் சார்பிலும் , காங்கிரஸ் கட்சி சார்பிலும் நான் முதல்வர் நலமடைய பிரார்த்தனை செய்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதே போல் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் முதலமைச்சரை பார்க்க வந்தார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :
அப்பலோ மருத்துவ மனைக்கு வந்து முதல்வர் உடல் நலம் குறித்த இயக்குநர், சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், மூத்த அமைச்சர் சந்தித்தேன் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் நல்ல முறையில் குணமடைந்து வருவதாகவும் முதல்வர் பூரண குணமடைந்து வீடுதிரும்பவும் மக்கள் பணிகளை தொடரவும் வாழ்த்துகிறோம்.இவ்வாறு வசன் தெரிவித்தார்.
