Nanjil smabath fb
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ஒரு துப்பாக்கியின் ஓசையைவிட அதிகமாகவும், பூகம்பத்தின் சீற்றத்தைவிட வேகமாகவும் இயங்கும் இயல்புடையவர் எனவும் நாஞ்சில் சம்பத் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் தனது பேஸ்புக்கில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வேட்பாளராக கழகத் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனைக கழகத்தின் ஆட்சி மன்றக்குழு தேர்ந்தெடுத்திருக்கிற செய்தி கழகத் தொண்டர்கள் நெஞ்சிலும் தமிழ்நாட்டின் சுக துக்கத்தைப் பற்றி கவலைப் படுபவர்கள் நெஞ்சிலும் மட்டற்ற மகிழ்ச்சியை தந்து இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
மேலும் ஒரு துப்பாக்கியின் ஓசையை விட அதிகமாகவும் , ஒரு பூகம்பத்தின் சீற்றத்தை விட வேகமாகவும் இயங்கும் இயல்புடையவர் தினகரன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றரை கோடி தொண்டர்களின் சங்கமமாக விளங்குகின்ற கழகத் தேரின் சாரதி என்றும் தினகரன் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டியது வரலாற்று தேவை காலத்தின் கட்டாயம் என்றும் அவல் குறிப்பிட்டுள்ளார்.
காவியம் செய்யப் போகின்ற தினகரனுக்கு கையெழுத்தாகி உதவப் போகிறேன். அவருடைய வெற்றிக்கு வித்தாக விழுவதற்கு வாருங்கள் வாலிப தம்பிகளே! வரலாறு படைப்போம் தொகை தொகையாய் பகை வந்தாலும் பகையை முடிப்போம், துரோகத்தை ஆழக்குழி தோண்டி புதைப்போம் என்றும் நாஞ்சில் சம்பத் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.
