’இனி அரசியல் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டேன்’ என்று வீறாப்பாக அறிவித்து திரைப்படங்கள் பக்கம் நடிக்கப்போன நாஞ்சில் சம்பத் திடீரென தி.மு.க.வுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவிருப்பதை சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

சற்றுமுன்னர் ஸ்டாலினை சந்தித்துவிட்டு பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், ‘’நான் தி.மு.க.வில் இணைவதாக இல்லை. ஆனால் பி.ஜே.பி. எதிரான மனநிலையில் உள்ளேன். இந்தத் தேர்தலில் வரும் ஏப்ரல் 16ம் தேதி வரை தமிழகம் முழுக்க பி.ஜே.பியை எதிர்த்து தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவிருக்கிறேன். இப்போதைக்கு நான் ஒரு இன்விசிபிள் பேச்சாளர்’ என்று அறிவித்தார்.

சமீபத்தில் டிடிவி தினகரன் கட்டியிலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக விலகிய நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தற்போது எந்த கட்சியிலும் சேராமல் ஒதுங்கி இருந்த நிலையில், தற்போது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 26-ம் தேதி முதல் தீவிர தேர்தல் பிரசாரத்தை நாஞ்சில் சம்பத் மேற்கொள்ளவுள்ளார்.