40 ஆண்டு காலமாக ரஜினியை நம்பி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்த தொண்டர்களை அவர் நிர்வாகியாக அறிவிக்கவில்லை என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். 

ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக நாஞ்சில் சம்பத் கூறுகையில்;- புதிதாக கட்சி துவங்கி உள்ள ரஜினிகாந்த் உலகத்தில் எந்த அரசியல் கட்சியும் செய்யாத முறையில் கட்சி துவங்குவதற்கு முன்பாகவே கட்சிக்கு நிர்வாகிகளை அறிவித்துள்ளார். பாஜக சொல்லித்தான் இவர் கட்சி துவங்க உள்ளார். பாஜகவின் அறிவுசார் அமைப்பினுடைய நிர்வாகி இங்கே நிர்வாகியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஆர்எஸ்எஸ் பண்ணையில் வளர்ந்தவர்.

பச்சை வகுப்புவாதி சித்தாந்தங்களால் வார்க்கப்பட்டவர். 40 ஆண்டு காலமாக ரஜினியை நம்பி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்த தொண்டர்களை அவர் நிர்வாகியாக அறிவிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். இரவல் நிர்வாகிகளை அறிவித்த ரஜினியின் கட்சி உருப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஜினி ரசிகர்களுக்கு நான் கூறுவது மண்குதிரையை நம்பி நீங்கள் ஏமாந்து விடாதீர்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மக்களையும் பார்க்க முயலுங்கள் என நாஞ்சில் சம்பத் அறிவுறுத்தியுள்ளார்.