டி.டி.வி.தினகரன் அணியில் ஆரம்ப காலத்தில் இருந்தவர் நாஞ்சில் சம்பத். அமமுகவில் இருந்து முதல் ஆளாக வெளியேறியதும் அவர் தான். இந்நிலையில் டி.,டி.வி.தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். 
 
இது குறித்து பேசிய நாஞ்சில் சம்பத், ’’அ.ம.மு.க. என்பது கட்சி அல்ல டி.டி.வி.தினகரன் தலைமையில் இயங்குகிற பெரிய கம்பெனி. அங்கே நாக பாம்புகள் தான் குடியிருக்கும். நல்லவர்கள் குடியிருக்க முடியாது. அந்த நாகப்பாம்புகள் அவரது காலைச் சுற்றியே கிடக்கின்றன. புகழேந்தி போன்ற நல்லவர்கள் அ.ம.மு.க.வில் இருந்து வெளியே வர முடிவு எடுத்தால் அவருக்கு நல்லது. அவர் எடுப்பார் என்று கருதுகிறேன். இனிமேல் எடப்பாடி முதல்வர் ஆகப்போவதில்லை. ஆகவே மீதி உள்ள நாட்களில் அனைத்து நாட்டிற்கும் போயிட்டு வருவது நல்லது.

சொட்டு நீர் பாசனத்திற்கு உலகிலேயே தலைசிறந்த நாடு இஸ்ரேல் இதற்கு நேரடியாக சென்று தான் பார்க்க வேண்டுமா? எதற்கு இந்த வறட்டு சவால். வாய் வேதாந்தம் எத்தனை நாள் நீடிக்க முடியும். மத்திய அரசாங்கத்தின் தயவில் காலம் தள்ளக்கூடிய அரசு செய்கின்ற தப்பாட்டத்தை தமிழக மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

இன்னொரு நாட்டில் இருக்கக்கூடிய சாதனையை நம்ம நாட்டில் செய்வதற்கே அங்கு சென்றுதான் பார்க்க வேண்டும் என்ற தேவையில்லாத ஒன்று தகவலை தெரிந்துகொண்டே செய்து வைக்கலாம் தகவல் தொழில் நுட்பம் அதிக அளவில் வளர்ந்து இருக்கின்ற கால கட்டத்தில் அமைச்சர்கள் இதுபோன்ற நடப்பது தமிழ்நாட்டில் இருப்பதற்கு வெட்கமாக இருக்கிறது’’ என அவர் தெரிவித்தார்.