Asianet News TamilAsianet News Tamil

'இன்னோவா' காரை திரும்ப ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத் - திமுகவில் சேருவது உறுதி

nanjil sampath-returns-his-car
Author
First Published Jan 3, 2017, 10:50 AM IST


அதிமுக நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக இருந்தவர் நாஞ்சில் சம்பத்

மதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக வைகோவுடன் பயணித்த சம்பத் சிறு மன கசப்பு காரணமாக ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

2012ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த அவருக்கு உடனடியாக கொள்கை பரப்பு து.செயலாளர் என்ற மிகப்பெரிய பதவியும் நட்சத்திர பேச்சளார் அந்தஸ்தும், பல லட்சம் மதிப்புள்ள புதிய இன்னோவா காரும் வழங்கப்பட்டது.

nanjil sampath-returns-his-car

அந்த சொகுசு இன்னோவா காரின் சாவியையும் முதலமைச்சர் ஜெயலலிதாவே நேரில் வழங்கினார்.

மேலும் நாஞ்சில் சம்பத் செல்லும் கூட்டங்களுக்கெல்லாம் ரூ.25,000... ரூ.50,000 என கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனால் கடந்த 4 ஆண்டுகளாகவே எல்லா வகையிலும் மிகுந்த செல்வாக்கோடு வலம் வந்தார் நாஞ்சில் சம்பத்.

மேலும் மகள் மதிவதனிக்கு வைகோ தலைமயில் திருமணம் செய்வேன் என காத்திருந்தவருக்கு ஜாக்பாட் அடித்தது போல ஜெயலலிதா தலைமையிலேயே சென்னை எம் ஆர் சி திருமண மணடபத்தில் திருமணம் நடைபெற்றது.

nanjil sampath-returns-his-car

மேலும் கடந்த வருடம் சென்னை வெள்ளத்தின் போது தொலைக்காட்சி பேட்டிகளில் கொஞ்சம் உண்மைகளை கூறி விட்டதால் நாஞ்சில் சம்பத்தின் அதனை பதவிகளும் பறி போயின..

அதனை தொடர்ந்து மீண்டும் பேச்சாளர் என்ற பதவி மட்டும் ஒட்டிகொண்டது. அதுவும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே கொடுக்கப்பட்டது.

இப்படி ஓரங்கட்டப்பட்டு பழைய மவுசோடு வலம் வர முடியாமல் போனதால் அப்போதே மனம் நொந்தார் சம்பத்.

nanjil sampath-returns-his-car

இந்நிலையில் ஜெ. மறைவையடுத்து அவர் திமுகவில் சேரப்போவதாக வதந்திகள் பரவின..

அதை அவர் மகள் மதிவதனி மறுத்தார். ஆனால் இன்று காலை திடீரென நாஞ்சில் சம்பத் தனக்கு அளிக்கப்பட்ட இன்னோவா காரை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்பைடைத்து விட்டதாக கூறியுள்ளார்.

இதன் மூலம் அவர் திமுகவில் சேருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios