nanjil sampath pressmeet in dinakaran

டிடிவி தினகரன் விரைவில் தனி பெருந்தலைவராக உருவெடுப்பார் எனவும் அவருடன் சேர்ந்து பணியாற்று காலம் எனக்கும் கிடைக்கும் எனவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை அவருக்கு தீவிர விசுவாசியாக திகழ்ந்தவர் நாஞ்சில் சம்பத். இதனால் ஜெயல்லிதா நாஞ்சில் சம்பத்துக்கு இன்னோவா கார் ஒன்றை பரிசாக அளித்தார்.

இதையடுத்து ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிகலாவை அனைவரும் தலைவராக ஏற்றுகொண்ட நிலையில் நாஞ்சில் சம்பத் மட்டும் தலைமை கழகத்திற்கு சென்று ஜெயல்லிதா அளித்த காரை ஒப்படைத்து விட்டு வந்தார்.

இதனால் அதிமுகவே அவரை திரும்பி பார்த்தது. ஆனால் சில நாட்களிலேயே ச்சிகலாவின் தீவிர விசுவாசியாக மாறினார் நாஞ்சில் சம்பத். அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதும் டிடிவிக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

சின்னம்மா தலைமை ஏற்க வேண்டும் என கூறிய வாயால் தற்போது டிடிவியால் மட்டுமே தலைமையை காப்பாற்ற முடியும் என கூறி வருகிறார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத் அதிமுகவில் தற்போது நிலவும் தட்பவெட்ப சூழல் நிரந்தரமானது அல்ல எனவும், விரைவில் அது மாறும் எனவும் தெரிவித்தார்.

தினகரன் விரைவில் தனி பெருந்தலைவராக உறுவெடுப்பார் எனவும், அவருடன் சேர்ந்து பணியாற்று காலம் எனக்கும் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் சட்டபேரவை கூட்ட தொடர் முடிவதற்கு முன்னால் , அதிமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் டிடிவி தினகரனை சந்திப்பார்கள் என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்