அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்தவுடன் முற்றிலுமாக ஒதுங்கி போய் விட்டார்.

பின்னர் திமுகவில் அவர் இணைய போவதாக பரபரப்பு தகவல்கள் பரவின.

முதலில் நாஞ்சில் சம்பத் மறுத்தாலும் பின்னர் பத்திரிக்கையாளர்களையும் அதிமுகவினரையும் குழப்ப தொடங்கினார்.

அதிமுகவில் தான் தொடர்ந்து நீடிப்பதாகவும் ஆனால் இன்னோவா காரை மட்டும் திருப்பி ஒப்படைத்து விட்டதாகவும் அதிமுக தலைமை அழைத்தால் சென்று பேசுவேன் என்றும் கன்னாபின்னா என குழப்பினார்.

இந்நிலையில் காலை ஒரு பேச்சு பேசிய நாஞ்சில் சம்பத் மாலையில் ஒரு பேச்சாக மாற்றி பேசினார்.

தற்போது அவர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அழைத்தால் சந்தித்து பேச தயாராக இருப்பதாகவும் ஸ்டாலின் ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சி தலைவராக நடந்து கொள்வதாக பாராட்டியுள்ளார்.

மேலும் திமுகவின் முகமாய் முகவரியாய் ஸ்டாலினின் செயல்பாடு உள்ளது என திமுகவினர் காது குளிர வாயார பாராட்டியுள்ளார்.

இன்னோவா சம்பத் என்று அழைக்கப்பட நாஞ்சில் சம்பத் அதிமுக சார்பில் வழங்கப்பட்ட சொகுசு காரை திரும்ப ஒப்படைத்ததிலிருந்தே அதிமுகவிலிருந்து உறுதியாகிவிட்டது.

மேலும் மு.க.ஸ்டாலினை அதிகமாக புகழ்ந்து இருப்பதால் திமுகவின் பொதுக்குழுவிற்கு பிறகு ஸ்டாலின் செயல் தலைவராக பதவியேற்ற பின் நாஞ்சில் சம்பத், நடிகர் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் திமுகவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.