nanjil sampath praised dinakaran
நேதாஜி, அண்ணாவுக்கே கிடைக்காத இளைஞர் படை இன்று தினகரனுக்கு கிடைத்துள்ளதாக அவரது ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தினகரன் அணி சார்பாகவும் கொண்டாடப்படுகிறது.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத், திராவிட கட்சிகளை வீழ்த்த சினிமா பிரபலங்கள் களமிறக்கப்படுகின்றனர். அதற்கு தெரிந்தோ, தெரியாமலோ மோடி அரசு ஆதரவு கொடுக்கிறது. ஆனால் அது ஒருபோதும் தமிழகத்தில் ஈடேறாது.
இளைஞர்களை வசீகரிக்கும் தலைவராக தினகரன் உள்ளார். நேதாஜி, அண்ணாவை விட அதிகமான இளைஞர் படை தினகரனுக்கு கிடைத்துள்ளது. தமிழகத்தின் நம்பிக்கையாக தினகரன் திகழ்கிறார். ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவேன் என சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார் தினகரன். இரட்டை இலை இல்லாத போதும் தினகரன் வெற்றி பெற்று, சின்னம் முக்கியமல்ல; செல்வாக்குதான் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளார்.
தமிழக அரசு நீதிமன்ற படிக்கட்டில் குற்றுயிராக கிடக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இந்த ஆட்சி முடிவுக்கு வரலாம். அமைச்சர்களுக்கு எங்கு சென்றாலும் ஆதரவு இல்லை. துரோகத்திற்கு நீண்ட நாள் விளம்பரம் கிடைக்காது என நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.
