அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத் இன்னோவா சம்பத் என்றும் அழைக்கப்பட்டார்.

தனக்கு அளிக்கப்பட்ட இன்னோவா காரால் அவருக்கு இந்த பெயர் கிடைத்தது.

அப்படிப்பட்ட இன்னோவா காரை நாஞ்சில் சம்பத் தற்போது திருப்பி கொடுத்துள்ளார்.

இதனால் அவர் அதிமுகவிலிருந்து விலகுவது உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம்.

இந்த செய்தி ஆதாரத்தோடு தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியாகிவிட்டது,

இந்நிலையில் செங்கல்பட்டுக்கு வந்த நாஞ்சில் சம்பத் தனியார் தொலைகாட்சி செய்தியாளரிடம் பேசினார்.

பேசும்போது உறுதியாக எதுவும் சொல்லாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

அதிமுக தலைமையை எதிர்க்கவும் செய்தார்.

மீண்டும் பேசுவேன் என்றும் சொன்னார்.

சசிகலா தலைமை ஏற்க தகுதி இல்லை என்றும் சொல்கிறார்.

மீண்டும் தலைமை பொறுப்பேற்ற சசிகலா தன்னை நிருபிக்க வேண்டும் என்கிறார்.

எல்லாவற்றுக்கும் 'ஹைலைட்டாக' 'அதிமுக அழைத்தால் செல்வீர்களா..?' என்ற கேள்விக்கு 'அதிமுக அழைத்தால் நிச்சயம் சென்று பார்ப்பேன்' என்று போட்டாரே ஒரு போடு.

நாஞ்சில் சம்பத்தின் இந்த பேட்டியால் பேட்டியெடுத்த நிருபர் மட்டுமல்லாமல் அதை பார்த்த மக்கள் அனைவரும் கூட குழம்பித்தான் போனார்கள்.

30 வருட அரசியல் பணியை விட்டு விட்டு தீவிர இலக்கிய பணிக்கு செல்லபோவதாக பேட்டியின் ஆரமபத்தில் தெரிவித்தார்.

ஆனால் சற்று நேத்ரதுக்கெல்லாம் ஜனவரி 15ஆம் தேதி அதாவது 'தை பிறந்தால் வழி பறக்கும்' எனது முடிவை அப்போது தெரிவிக்கிறேன் என்கிறார்.

நாஞ்சில் சம்பத் ஒரு வழியாக அதிமுகவையும் பத்திரிகையாளர்களையும் குழப்போ குழப்பு என்று குழப்புகிறார்.