Nanjil Sampath is never stable in his stand - C.R. Saraswathi

கட்சியில் இருந்து விலகுவது என்பது நாஞ்சில் சம்பத்துக்கு புதிது இல்லை என்றும், நிலையான மனநிலை இல்லாதவர் என்றும் அவர் விலகியதால் கட்சிக்கு நஷ்டம் இல்லை; அவருக்குத்தான் என்றும் தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.

சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத், மதிமுகவில் இருந்து விலகி, பின்னர் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு, அதிமுக பிளவுபட்டபோது? சசிகலா அணியில் நாஞ்சில் சம்பத் தஞ்சம் அடைந்தார்.

சசிகலா தலைமையில் அதிமுக அம்மா அணியை தினகரன் வழிநடத்தயிபோது, அவருக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் உடனிருந்தார். தற்போது, டிடிவி தினகரன், புதிதாக அரசிய்ல அமைப்பு ஒன்றை தொடங்கினார்.

இந்த நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்து வந்த நாஞ்சில் சம்பத், திடீரென விலகினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதில் எனக்கு உடன்பாடுஇல்லை என்றும், அண்ணா - திராவிடம் என்பதை தவிர்த்து என்னால் பேச முடியாது என்றும் விளக்கம் கூறினார். இனிமேல் நான் எந்த அரசியலிலும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

நாஞ்சில் சம்பத் விலகல் குறித்து தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி, பிரபல வெப்சைட் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், மதிமுகவில் நாஞ்சில் சம்பத் இருந்தபோது, ஜெயலலிதாவைப் பற்றி எவ்வளவு மோசமான விமர்சனங்களை வைத்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி பேசிவிட்டு, அதிமுகவுக்கு வருகிறேன் என்று வந்தவரை, அவர் பேசியதை எல்லாம் மறந்துவிட்டு கட்சியில் இணைத்துக் கொண்டார் ஜெயலலிதா.

கட்சியில் இருந்து கொண்டு கட்சிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார் நாஞ்சில் சம்பத். இதை அடுத்து, அவர் தொலைக்காட்சிகளில் பேசுவதற்கு ஜெயலலிதா தடை விதித்தார். இந்த நிலையில், ஜெயலலிதா இறந்தபோது, சசிகலாவிடம் ஐக்கியம் ஆனார். ஜெயலலிதா கொடுத்த அதே மரியாதையை சசிகலாவும் அவருக்கு கொடுத்தார். 

அண்மைக்காலமாக எங்களுடைய தலைமை ஏற்பாடு செய்யும் எந்த கூட்டங்களுக்கும் வராமல் தவிர்த்து வந்தார். தற்போது அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவருடைய இந்த முடிவு ஒன்றும் புதிது அல்ல. நிலையான மனநிலை இல்லாதவர் அவர். பல வருடங்களாக கட்சியில் நல்ல பொறுப்பைக் கொடுத்திருந்த மதிமுக பொது செயலாளர் வைகோவையே தூக்கி எறிந்துவிட்டு வந்தவர் அவர். கோவை மிக மோகமாக விமர்சனம் செய்தவர். 

ஜெயலலிதா, சசிகலா என பாரபட்சமின்றி மிகவும் மோசமாக விமர்சித்துவிட்டு கட்சிக்கு வந்தவர் நாஞ்சில் சம்பத். அப்படிப்பட்டவர் எங்களுடைய கட்சி எடுக்கும் முடிவையோ அல்லது தலைமையை விமர்சிப்பதையோ நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றார். இதனால் கட்சிக்கு நஷ்டம் இல்லை; அவருக்குத்தான் என்றும், விலகுவது ஒன்றும் நாஞ்சில் சம்பத்துக்கு புதிது இல்லையே? என்றும் சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.