Nanjil Sampath is criticizing K.P.Munusamy

கே.பி.முனுசாமி இருக்க வேண்டிய இடம் கீழ்ப்பாக்கம் என்றும், முட்டாள்களின் சொர்கத்தில் இருக்க வேண்டியவர் என்றும் தினகரன் ஆதவாளர் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான கே.பி.முனுசாமி, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இவ்வாறு கூறியிருந்தனர். 

கே.பி.முனுசாமியின் பேச்சுக்கு பதிலடி அளிக்கும் வகையில், டிடிவி தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் பிரபல தமிழ் வெப்சைட் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, கே.பி.முனுசாமி கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டிய ஆள் என்று விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், பேசிய அவர், டிடிவி தினகரன் நித்தமும் மக்களை சந்திக்கிற தலைவர். மக்களை சந்திப்பதற்கு வாய்ப்பில்லாத இவர்கள், வெந்ததை தின்று வாயில் வந்ததை பேசுகிறார்கள். தினகரனுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒரு அடி முட்டாள் கூட சொல்ல மாட்டான்.

கே.பி.முனுசாமி, முட்டாள்களின் சொர்கத்தில் இருக்க வேண்டியவர். ஜெயலலிதாவின் உதவியாளராக 3 வருடம், கழகத்தின் அமைப்பு செயலாளராக பேரவைச் செயலாளராக, பொருளாளராகவும் இருந்தவர் தினகரன்.

பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் 5 ஆண்டு காலம் உறுப்பினராக, 6 ஆண்டு காலம் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தினகரன் இருந்துள்ளார். அவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை என்று முனுசாமி சொல்கிறார் என்றால் அவர் இருக்க வேண்டிய இடம் கீழ்ப்பாக்கம் என்று நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.