nanjil sampath criticizing nanjil sampath
ஜெ.தீபா நிராகரிக்கப்பட வேண்டியவர் என்றும் அது அணி இல்லை பிணி என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை நாஞ்சில் சம்பத் சந்தித்து பேசினார். அப்போது, ஜெ.தீபா நிராகரிக்கப்பட வேண்டியவர் என்றார். ஜெ.தீபா மனிதக்கழிவு என்றும் அகற்றப்பட வேண்டிய ஒன்றும் என்றும் அவர் விமர்சனம் செய்தார். ஜெ.தீபா அணி அல்ல அது பிணி என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற மனித கழிவுகளுக்கெல்லாம் உங்கள் ஊடகங்களில் முகம் கொடுக்காதீர்கள் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இரட்டை இலை சின்னத்திற்காக ஜெ.தீபா, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிராமணப் பத்திரம் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த பிராமணப் பத்திரம் கோயம்பேட்டில் வாங்கப்பட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பிரதமர் நரேந்திர மோடியை, ஜெ. தீபா சந்திக்கப் போவதாக கூறியது குறித்த கேள்விக்கு, பிரதமரை பிரியங்கா சோப்ரா போன்றோர் சந்தித்து வருகிறார்கள் அது போன்று தீபாவும் சந்திக்கட்டும் என்றார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடந்திருந்தால் தான் ஜெயித்திருப்பேன் என்று ஜெ. தீபா கூறியுள்ளது குறித்து பேசிய நாஞ்சில் சம்பத், தேர்தல் மீண்டும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
