Asianet News TamilAsianet News Tamil

இப்போ தெரிஞ்சிருக்கும் எங்க மாஸ் என்னன்னு? நாங்கல்லாம் அப்பவே அப்படி! திமுக எம்பிக்களை வாழ்த்திய நாஞ்சில் சம்பத்!!

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் தமிழில் பதவி பிரமாணம் ஏற்ற போது பெரும்பாலும் 'தமிழ் வாழ்க' என்ற கோஷங்கள் அதிகம்முழங்கின. தமிழ் வாழ்க என்ற வார்த்தையை கேட்டதும்  வந்தே மாதரம் போல்கே, ஜெய்ஸ்ரீராம், பாரத் மாதாகி ஜே' பாரத் மாதாகி ஜே'  என பிஜேபி எம்பிக்களை நடுங்க வைத்தது குறித்து  எதிரிகள் உங்களைப்பார்த்து தொடை நடுங்கிப் போவார்கள் என திமுக எம்பிக்களுக்கு நாஞ்சில் சம்பத் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

Nanjil sambath wishes DMK MPs
Author
Chennai, First Published Jun 18, 2019, 5:11 PM IST

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் தமிழில் பதவி பிரமாணம் ஏற்ற போது பெரும்பாலும் 'தமிழ் வாழ்க' என்ற கோஷங்கள் அதிகம்முழங்கின. தமிழ் வாழ்க என்ற வார்த்தையை கேட்டதும்  வந்தே மாதரம் போல்கே, ஜெய்ஸ்ரீராம், பாரத் மாதாகி ஜே' பாரத் மாதாகி ஜே'  என பிஜேபி எம்பிக்களை நடுங்க வைத்தது குறித்து  எதிரிகள் உங்களைப்பார்த்து தொடை நடுங்கிப் போவார்கள் என திமுக எம்பிக்களுக்கு நாஞ்சில் சம்பத் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

தயாநிதி மாறன் பதவியேற்கையில் தமிழ் வாழ்க, வாழ்க கலைஞர், வாழ்க பெரியார் என்று கூறினார். கனிமொழி தமிழில் பதவி பிரமாணம் ஏற்று இறுதியில் வாழ்க தமிழ், வாழ்க பெரியார் என குறிப்பிட்டார். அப்போது பாஜக எம்பிக்கள் ஜெய்ஸ்ரீராம் என கூச்சலிட்டனர்.  பாரத் மாதாகி ஜே' பாரத் மாதாகி ஜே'  என முழக்கங்களை எழுப்பி கூச்சலிட்டனர். திருமாவளவன் பதவியேற்று முடிக்கையில், வாழ்க அம்பேத்கர், பெரியார், வெல்க ஜனநாயம், சமத்துவம் என்று கூறினார். அப்போது ஆளுங்கட்சி தரப்பினர் வந்தே மாதரம் போல்கே என்று இந்தியில் முழக்கமிட்டனர். இதனால் அங்கு கூச்சல் குழப்பம் நிலவியது. அதேபோல, ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி, தமிழ்நாடே என் தாய்நாடு, தாய்நாட்டின் உரிமை காப்போம் என்று கூறி உறுதிமொழி எடுத்தார்.  தேனி அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், வாழ்க அம்மா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்று முழங்கினார். 

Nanjil sambath wishes DMK MPs

நாடாளுமன்றத்தில் பதவியேற்கும் முதல் நாளிலேயே முதல் நாளிலேயே, பிஜேபி எம்பிக்கள் பிரஷரை எகிறவைத்த திமுக எம்பிக்கள். அதிலும் குறிப்பாக கனிமொழி, தனது பதவியேற்பின் முடிவில் வாழ்க பெரியார் எனக்கூறினார். அப்போது உடனடியாக ஜெய் ஸ்ரீராம் என கோஷங்கள் எழுந்தன. இப்படியாக முதல்நாளே நாங்க நாளுக்கு நாள் மாஸ் காட்டுவோம் என கம்பீரக் குரல்களை பதிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து முன்னணி புலனாய்வு வார இதழுக்கு அவர் அளித்த பேட்டியில்;  தமிழினத்தினுடைய மீட்பு வரலாற்றில் நல்ல நாள். திமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள்  தமிழில் பதவி பிரமாணம் எடுத்ததும், தேசிய காப்பு பிரமாணத்தை தமிழில் சொன்னதும் பெரியார் வாழ்க, அண்ணா வாழ்க, கலைஞர் வாழ்க என்று நாடாளுமன்றத்தில் முழங்கியதும் இன்றைக்கு தமிழர்கள் எப்பொழுதும் தனித்துவம் உள்ளவர்கள், எங்களை தவிர்க்கவும் முடியாது, எங்களை தகர்க்கவும் முடியாது என்பதை முதல் நாளிலேயே சொல்லிவிட்டார்கள். 

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால்,  அழகாக சொல்வார் அண்ணா, டெல்லியோடு மோத டெல்லியோடு யுத்தம் செய்ய டெல்லியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை உடைத்து நொறுக்க திமுக ஒரு படைக்கலனை அனுப்புகிறது என்று. அப்படி எதிரிகள் உங்களைப்பார்த்து தொடை நடுங்கிப் போவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாஞ்சில் சம்பத்தின் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios