நக்குற நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியவா போகுது என நடிகர் ரஜினிகாந்தை நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார் . நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து தெரிவித்த கருத்துக்கு நாஞ்சில் சம்பத் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார் .  துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து தெரிவித்த கருத்து ஒட்டுமொத்த திராவிட இயக்க அரசியல் தலைவர்களையும்  திராவிட இயக்க சிந்தனையாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் புள்ளிகள் இயக்குகின்றனர் என திருமாவளவன் உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர் . 

சாதிக்கொடுமை , சமூகநீதி என வாழ்நாளெல்லாம் தமிழ் சமூகத்திற்காக வாழ்ந்து மறைந்த பெரியார் குறித்து ரஜினி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென திராவிடர் கழகம் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திய நிலையில் ,  தான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை , அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி திட்டவட்டமாக மறுத்துள்ளார் .  ஆனாலும் ரஜினியை அரசியலுக்கு அப்பாற்பட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர் .  அத்துடன் பெரியார் பேசியதற்கான ஆதாரம் என செய்தியாளர்களுக்கு மத்தியில்  ஒரு பத்திரிக்கை நகலை காட்டிய ரஜினி ,  இந்து குழுமத்தின் அவுட்லுக் பத்திரிக்கை எனகூறி  புதிய சர்ச்சையில் சிக்கினார். 

இவ்வளவு அறிவுரை சொல்லும் ரஜினி  செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன்னர்  எது எந்த பத்திரிக்கை என்ற விவரத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டாமா என  பலர் ரஜினியை கிண்டலடித்து  வருகின்றனர் .   இந்நிலையில் இலக்கியச் சொற்பொழிவாளரும்  அரசியல் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் டுவிட் ஒன்றை வெளியிட்டுள்ளார் , அதில் அவுட்லுக்குன்னு சொல்றாரு , " இந்து  குழுமம்னு சொல்றாரு அதுசரி  நக்குற நாய்க்கு செக்கு எது சிவலிங்கம் எதுன்னு தெரியவா போகுது"# பெரியார் #ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டுள்ளார் . இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை நாயுடன் ஒப்பிட்டு பேசியதற்கு அவரது ரசிகர்கள் நாஞ்சிலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.