மு.க. அழகிரியை சேர்ப்பதன் மூலம் தி.மு.க. வலுப்பெறும் என்று, அரசியலில் இருந்து ஒதுங்கியிருகும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

மு.க. அழகிரியை சேர்ப்பதன் மூலம் தி.மு.க. வலுப்பெறும் என்று, அரசியலில் இருந்து ஒதுங்கியிருகும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

மதிமுகவில், வைகோவின் வலதுகரம் போல் இருந்தவர், நாஞ்சில் சம்பத். விடுதலை புலிகள் ஆதரவு பேச்சுகளுக்காக பல்வேறு வழக்குகளையும் சந்தித்தவர். இடையில் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஜெயலலிதா முன்னணியில் அ.தி.மு.க.வில் ஐக்கியமானார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் தினகரன் அணியில் சேர்ந்தார்.

எனினும், அங்கேயும் அண்ணா, திராவிடம் உள்ளிட்டவை கட்சி பெயரில் இடம் பெறவில்லை என்று கூறி, கட்சியில் இருந்து விலகினார். அரசியலே வேண்டாம் என்று இலக்கிய மேடைகளில் தற்போது பேசி வருகிறார்.

இந்நிலையில், திருவாரூக்கு சென்ற நாஞ்சில் சம்பத், அங்கு மீண்டும் அரசியல் கருத்துகளை தெரிவித்து, சூட்டை கிளப்பியுள்ளார். மு.க. அழகிரியை சேர்த்து கொள்வதால், நிச்சயம் தி.மு.க. வலுப்பெறும் என்று கூறிய அவர், இது குறித்த இறுதி முடிவு ஸ்டாலின் கையில் தான் உள்ளது என்றார். 

திரைத்துறையில் இருந்து வரும் எல்லோருமே அரசியலில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிவிடமுடியாது என்ற நாஞ்சில் சம்பத், அரசியலில் கால்தடம் பதிக்கும் திரைத்துறையினர் எல்லோருமே வெற்றிபெற்றுவிட முடியாது என்றார். நிலம், நீர், காற்று இருக்கும் வரை திராவிடமும் இருக்கும் என்று, அவர் மேலும் தெரிவித்தார்.

அரசியலே வேண்டாம் சாமி என்று ஒதுங்கி, இலக்கிய மேடைகளில் முழங்கி வந்த நாஞ்சில் சம்பத், மீண்டும் அரசியல் பேச ஆரம்பித்திருப்பது, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.