அமமுக என்பது கட்சி அல்ல தினகரன் தலைமையில் இயங்குகின்ற பெரிய கம்பெனி. அங்கே நாக பாம்புகள் தான் குடியிருக்கும் நல்லவர்கள் குடியிருக்க முடியாது,எடப்பாடி இனி முதல்வர் ஆகப்போவதில்லை, ஆகவே மீதி உள்ள நாட்களில் அனைத்து நாட்டிற்கும் போயிட்டு வருவது நல்லது என்று நாஞ்சில் சம்பத் ஒரே நேரத்தில் விமர்சித்துள்ளார்.

இதில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்  அவர் இந்திய பொருளாதார சரிவு குறித்த கேள்விக்கு; இந்தியாவுடைய ஆட்டோ மொபைல் மோட்டார் வாகன உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் விற்பனை 40 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது, என்று சொல்கிறார்கள். சென்னையில் இதுவரை  5 லட்சம் பேர் வேலை இழந்து விட்டார்கள்.

ஆனால், மத்திய நிதியமைச்சர் வாடகை கார்களில் பயணம் செய்ய தொடங்கி விட்டதால்  கார் வாங்குவதை நிறுத்தி விட்டார்கள் என்று ஒரு புதிய கதையை கட்டுகிறார். கார் வைத்து பயன்படுத்த வேண்டுமானால் கார் வைத்திருபவர்கள் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு விலைவாசி நம்முடைய விலா எலும்புகளை குத்தி கழிக்கின்றது. இந்தியாவின் பன்முகத்தன்மை பாழ்பட்டுக் கிடக்கிறது. இதனை திசை திருப்புவதற்காக மத்தியிலும் மாநிலத்திலும் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடகத்தின் திரை விரைவில் மூடப்படும் அதற்கான அறிகுறிகளை மக்கள் உணர்ந்து மக்கள் இன்று சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். 

இதனையடுத்து தினகரன் பற்றிய கேள்விக்கு,  அமமுக என்பது கட்சி அல்ல தினகரன் தலைமையில் இயங்குகின்ற பெரிய கம்பெனி.அங்கே நாக பாம்புகள் தான் குடியிருக்கும் நல்லவர்கள் குடியிருக்க முடியாது புகழேந்தி அ.ம.மு.க.வில் இருந்து வெளியே வர முடிவு எடுத்தால் அவருக்கு நல்லது அவர் எடுப்பார் என்று கருதுகிறேன்.

கடைசியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று வந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்; இனிமேல் எடப்பாடி இனி முதல்வர் ஆகப்போவதில்லை, எனவே மீதி உள்ள நாட்களில் அனைத்து நாட்டிற்கும் போயிட்டு வருவது நல்லது. சொட்டு நீர் பாசனத்திற்கு உலகிலேயே தலைசிறந்த நாடு இஸ்ரேல்க்கு  நேரடியாக தா சென்று பார்க்கணுமா? எதற்கு இந்த வறட்டு சவால்? வாய் வேதாந்தம்? எத்தனை நாள் நீடிக்க முடியும்? மத்திய அரசின் தயவில் காலம் தள்ளும் இந்த அரசு செய்கின்ற தப்பாட்டத்தை தமிழக மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள்.

இன்னொரு நாட்டில் இருக்கக்கூடிய சாதனையை நம்ம நாட்டில் செய்வதற்கே அங்கு சென்றுதான் பார்க்க வேண்டுமா? இந்த தேவையில்லாத ஒன்று தான், தகவல் தொழில் நுட்பம் அதிக அளவில் வளர்ந்து இருக்கின்ற கால கட்டத்தில் அமைச்சர்கள் இதுபோன்ற நடப்பது தமிழ்நாட்டில் இருக்கவே வெட்கமாக இருக்கிறது என இவ்வாறு அவர் கூறினார்.