nanjil sambath against bite to edappadi palanichamy
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கினால் முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்குவோம் எனவும், ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் பச்சை துரோகிகள் எனவும் தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பல்வேறு உச்சகட்ட குழப்பங்களுக்கு மத்தியில் தற்போது ஒரு அமைதி நிலையை எட்டியுள்ளது.
அதாவது, அதிமுகவின் எடப்பாடியும் அணியும் பன்னீர் அணியும் இன்று தலைமை கழகத்தில் இணைந்தன. மேலும் சசிகலாவை நீக்க பொதுக்குழு கூட்டப்படும் என வைத்தியலிங்கம் அறிவிப்பு வெளியிட்டார்.
இதைதொடர்ந்து துணை பொதுச்செயலாளராக பன்னீர்செல்வம் பொறுப்பெற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமானம் செய்து வைத்தார்.
பின்னர் தலைமை செயலகத்தில் பன்னீர் செல்வம் பதவியேற்று கொண்டார். அவரை தொடர்ந்து அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் பதவியேற்று கொண்டார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கினால் முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்குவோம் எனவும், ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் பச்சை துரோகிகள் எனவும் தெரிவித்தார்.
