Asianet News TamilAsianet News Tamil

நாங்குநேரி எங்களுக்கு தான் வேண்டும்..! ஸ்டாலினிடம் கறார் காட்டிய அழகிரி... டென்சனில் திமுக கேம்ப்..!

அடுத்த வாரம் நாங்குநேரி சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசியுள்ளார்.

Nanguneri by-election...DMK, Congress clash
Author
Tamil Nadu, First Published Aug 31, 2019, 10:34 AM IST

அடுத்த வாரம் நாங்குநேரி சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசியுள்ளார்.

நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாகிவிட்டார். இதனால் தனது நாங்குநேரி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டார். மேலும் திமுக எம்எல்ஏ மறைவால் விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளது. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் செப்டம்பர் மாத இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 Nanguneri by-election...DMK, Congress clash

நாடாளுமன்ற தேர்தலின் போது நடைபெற்ற இடைத்தேர்தல்கள் அனைத்திலும் திமுக வேட்பாளர்களை களம் இறக்கியது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியை கேட்டது. ஆனால் திமுக கைவிரித்துவிட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமாவால் காலியாகி உள்ள நாங்குநேரியில் காங்கிரஸ் தான் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி உறுதியாக உள்ளது. கூட்டணி தர்மப்படி கூட்டணி கட்சி போட்டியிட்ட தொகுதியில் இடைத்தேர்தல் என்றால் அந்த தொகுதி அதே கட்சிக்கு ஒதுக்கப்படுவது மரபு. Nanguneri by-election...DMK, Congress clash

திமுக தலைவராக இருந்த கலைஞர் இந்த மரபை கடைபிடித்தவர். அதே வகையில் திமுக நடந்து கொள்ளும் என்று காங்கிரஸ் எதிர்பார்த்துள்ளது. ஆனால் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டிக்கு திமுக ஏற்கனவே வேட்பாளரை ரெடி செய்துவிட்டது. இந்த தகவல் அறிந்து தான் கே.எஸ்.அழகிரி நேற்று அவசரமாக சென்று ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். அப்போது நாங்குநேரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. 

Nanguneri by-election...DMK, Congress clash

ஆனால் அதற்கு ஸ்டாலின் எந்த தீர்க்கமான பதிலையும் சொல்லவில்லை. இதனிடையே நாங்குநேரி தொகுதியில் போட்டி என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது என்கிறார்கள். வசந்தகுமார் தன்னுடைய ஆதரவாளர் ஒருவரை அங்கு நிறுத்த தயாராகி வருகிறார். இல்லை என்றால் தன்னுடைய குடும்ப உறுப்பினர் ஒருவரை எம்எல்ஏவாக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். மேலும் வசந்தகுமார் மனது வைத்தால் நாங்குநேரியை எளிதாக வென்றுவிடலாம் என்று காங்கிரஸ் கணக்கு போடுகிறது. Nanguneri by-election...DMK, Congress clash

இதனால் நாங்குநேரி விவகாரத்தில் விட்டுக் கொடுக்க காங்கிரஸ் முன்வராத என்கிறார்கள். அதே சமயம் நாங்குநேரியில் திமுக தான் போட்டியிட வேண்டும் என்பதில் ஸ்டாலின் மற்றும் உதயநிதி கறாராக உள்ளனர். இதனால் இந்த விவகாரம் டெல்லி வரை செல்லும் என்று கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios