Asianet News TamilAsianet News Tamil

எஸ்.பி.வேலுமணியைவிட சாமர்த்தியசாலி... காரணகர்த்தாவையே கக்கத்தில் இடுக்கிக் கொண்ட திமுக ஆட்சி..!

நந்தகுமாரை மேலே சொன்னது போல் திமுக அரசு பணியிடம், பதவி மாற்றம் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு பதிலாக மேலும் புதிய பொறுப்புகளை கொடுத்து கெளரவப்படுத்துகிறது.

Nandakumar has more power in the DMK regime than SP Velumani
Author
Tamil Nadu, First Published Nov 9, 2021, 6:16 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

2015 வெள்ளம் போலவே இப்போதும் இருக்கிறது. 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. அதிமுக ஆட்சியில் ஏரிகள் சீரமைப்பு, மழைநீர் வடிகால் அமைப்பு, ஸ்மார்ட் சிட்டி திட்டம் என சகலத்திலும் நடந்த ஊழலால் இன்று ஒருநாள் மழைக்கே சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.Nandakumar has more power in the DMK regime than SP Velumani

இதுகுறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘’ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை போட்டு, மத்திய அரசிடம் இருந்து நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என தெரியவில்லை. இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு விசாரணை நடத்தப்படும். வேலுமணி தலைமையிலான உள்ளாட்சித்துறையில் எதுவுமே சரியாக நடைபெறவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

இதையும் படியுங்கள்:- ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்சன்..! மு.க.ஸ்டாலின் தொகுதியில் பாஜக அண்ணாமலையின் செட்-அப் ஷூட்..!

இதுகுறித்து அறப்போர் இயக்கம் கூறுகையில், ‘’106 கோடி மதிப்பில் 47 நீர்நிலைகளை சீரமைக்க போடப்பட்ட டெண்டர் 2 வருடங்களாக முடியாமல் இழுத்தடித்துக்கொண்டு இருக்கிறது. புதிய அரசு அமைந்து 6 மாதங்கள் கடந்த பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை. தற்பொழுது சென்னைக்கு வராதீர்கள் என்று முதல்வர் சொல்லும் அளவிற்கு நிலைமை எல்லை மீறி போகிறது.Nandakumar has more power in the DMK regime than SP Velumani

கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கிறோம். அதற்கான ஆதாரங்களையும் திரட்டி புகார் கொடுத்துள்ளோம். ஆனால் அதை பற்றி பேசுவதற்கு கூட தமிழ்நாடு அரசுக்கு நேரம் இல்லை. வேலுமணியின் கையாள் சென்னை முன்னாள் தலைமை பொறியாளர் நந்தகுமார் மெகா ஊழல் அதிகாரி, இன்னும் பதவியில் தொடர்கிறார்! அவரே இப்போது கண்காணிப்பு அதிகாரி 
வேலுமணி வீட்டில் ரெய்டு நடக்கும்போது நந்தகுமாருக்கு சொந்தமான இடங்களிலும் ரெய்டு நடந்தது! 

இதையும் படியுங்கள்:- பலநூறுகோடி ஊழல்... திமுக அமைச்சரிடம் பேரம்... எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அப்ரூவராக மாறத்துடித்த அதிகாரி..!?

அதிகாரிகள்-நிறுவனங்கள் மீது கூட நடவடிக்கை எடுக்க முடியவில்லை. தலைமை பொறியாளர் நந்தகுமார் போன்ற ஊழல்வாதிகளை இன்னும் அரசு பணியில் தொடர விடுவது, ஊழல்வாதிகளை ஊக்கப்படுத்தும். அதே ஊழல் அதிகாரிகள் முறைகேடு ஒப்பந்தாரர்களை வைத்து கொண்டு எப்படி நல்லாட்சி வரும்?

Nandakumar has more power in the DMK regime than SP Velumani

இந்த அவலத்துக்கு காரணம் மாநகராட்சியில் உள்ள தலைமை பொறியாளர் நந்தகுமாரின் ஊழல்தான் என்பது உலகம் அறிந்த விஷயம். ஆனால் திமுக அமைச்சர் மா.சுப்ரமணியன் நந்தகுமாரை அருகில் வைத்துக்கொண்டே இந்த விவகாரம் குறித்து பத்திரிக்கை பேட்டி கொடுப்பது என்ன நியாயம்? அவரை பதவியிலிருந்து நீக்கி எப்பொழுது நடவடிக்கை பாயுமோ அப்பத்தான் கொஞ்சம் ஊழல் குறையும், தரம் உயரும்.

இதையும் படியுங்கள்:- குட்டி ஸ்டோரி ஆஃப் நந்தகுமார்... மு.க.ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கதை சொல்லும் சென்னை மாநகராட்சி பொறியாளர்கள்..!

 

அதிமுக ஆட்சியில் இந்த கொள்ளைகள் அரங்கேறிய போது மாநகராட்சி  தலைமை பொறியாளராக இருந்த நந்தகுமார் தற்பொழுது மழை நிவாரண பணிகளின் பொறுப்பாளர். தண்டனைக்கு பதிலாக கூடுதல் பொறுப்பு’’ என குற்றம்சாட்டுகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios