பள்ளிக்கு செல்ல வேண்டிய மாணவர்களை போராட்டக் களத்திற்கு அழைத்துச் சென்ற நாம் தமிழர் கட்சி  நிர்வாகியின் செயலுக்கு  பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.   இலங்கையில்  உள்நாட்டுப் போர் நடந்து முடிந்த பின்னர் திரைப்பட இயக்குனர் சீமான் தலைமையில் தமிழகத்தில் நாம் தமிழர் என்ற கட்சி மீண்டும் புத்துயிர் பெற்றது .  தமிழ்,  தமிழர் உரிமை என ஆவேசமாக பேசி சீமான்  பலரையும் கவர்ந்து வருகிறார் .  இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை  போராட்டத்திற்கு அழைத்து சென்றதால் அவரின் கட்சி நிர்வாகிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

 

கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் 6 பேர் பள்ளிக்கு வரவில்லை என அவர்களின் பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியரிடமிருந்து தகவல் சென்றது ,  இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து விசாரித்தனர். அங்கு தங்கள் பிள்ளைகளை காணவில்லே அதை கண்டு அதிர்சியடைந்த அவர்கள்,   இதுகுறித்து உடனே  போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  சிலமணி நேரத்தில்  குழந்தைகள் மாயமான விவகாரம் மாவட்டம் முழுவதும்  காட்டுத்தீயாய் பரவியது .   இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நாம் தமிழர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாயமானதாக (கடத்தப்பட்டதாக) கருதப்பட்ட 6 சிறுவர்கள் பங்கேற்றிருப்பது  போலீசுக்கு தெரியவந்தது  

இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசாரும்  அச் சிறுவர்களின்  பெற்றோர்களும் ,  மாணவர்களை கண்டு அவர்களை கட்டிப்பிடித்து கதறினார் .  தங்கள் குழந்தைகளின் உறவினரான  ராகுல் என்பவர் சொல்லாமல் கொள்ளாமல் போராட்டத்திற்கு அழைத்து  சென்றதால் அவர் மீது போலீசில் புகார் எதுவும் அவர்கள் கொடுக்கவில்லை . இந்நிலையில்  சிறுவர்களை அழைத்து சென்ற ராகுலை பிடித்து  இனி இப்படி செய்ய கூடாது என போலீசார் எச்சரித்து அனுப்பினர் .  இச்சம்பவம்  கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .