மெட்ரோ ஆகாதென மோனோ கேட்டவர் பெயரை, கழக அரசால் வந்த மெட்ரோவுக்கு வைப்பது அறுவறுப்பின் உச்சம் என ஜெயலலிதாவின் பெயரை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பெயர் சூட்டியதை கண்டித்துள்ளார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.!

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் இனி புரட்சி தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் மெட்ரோ ரயில் நிலையம் என்று அழைக்கப்படும். ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் இனி அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் என்று அழைக்கப்படும். கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலையம் இனி புரட்சி தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலையம் என்று அழைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ’’முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனையாலும், தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உழைப்பாலும் உருவான மெட்ரோ ரயில் நிலையத்துக்கு முதல் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவரின் பெயரை வைத்துள்ளது அடிமைக்கூட்டம். மெட்ரோ ஆகாதென மோனோ கேட்டவர் பெயரை, கழக அரசால் வந்த மெட்ரோவுக்கு வைப்பது அறுவறுப்பின் உச்சம்’’ என பதிவிட்டுள்ளார்.