ஆமமூக்கன்... முட்ட போண்டா! ஓசி பிரியாணி கடைக்கு ஒத்தாசை செய்ய போறாராம், ஃபெரா தனமும், பெட்டைத்தனமும் என்ற தலைப்பில் அதிமுக தினகரனை திட்டித்  தீர்த்துள்ளது.

வரும் 28ஆம் தேதி ஆரம்பமாகவுள்ள சட்டமன்ற மானியக் கூட்டத் தொடர் ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஜூலை 1ஆம் தேதி பட்டியலில் எடுத்துக்கொள்ளப்படும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். தீர்மானத்தை வெற்றிபெறச் செய்யும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் தினகரனிடம், சபாநாயகருக்கு எதிராக திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து கேள்வியெழுப்பினார்.

அதற்க்கு பதிலளித்த தினகரன், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்துதான் என்னால் வாக்களிக்க முடியும். சபாநாயகரை ஆதரித்தா வாக்களிக்கச் சொல்கிறீர்கள்? அவர் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. எங்கள் தரப்பில் 18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்தார். பன்னீர் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் ஒரு நிலைப்பாடும், 18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் ஒரு நிலைப்பாடும் எடுத்தார். இப்படிப்பட்ட நிலையில் அவருக்கு எதிர்ப்பாகத்தான் வாக்களிப்பேன் என்று பதிலளித்தார்.

தினகரனின் பதிலாளால் கடுப்பான அதிமுக ஃபெரா தனமும், பெட்டைத்தனமும்" என்ற தலைப்பில்  தினகரனை கழுவி கழுவி ஊத்தியுள்ளது. திமுகவை ஆதரிக்கிறாராம்  திகார்கரன், அம்மா அமர வைத்த சபாநாயகர் மீது அவ நம்பிக்கை என்கிற மு.க.ஸ்டாலின் முடிவுக்கு முட்ட போண்டாவும் ஒத்து ஊதுவாராம்.

இருக்காதா பின்ன, 90 களிலேயே லண்டனில் 1000 கோடிக்கு ஆடம்பர ஹோட்டல் வாங்கி விட்டு அந்நிய செலாவணி மோசடியில் உள்ளிட்ட அத்தனை விவரங்களும் விசாரணை அதிகாரி நல்லம நாயுடுவின் விரல் நுனியில் என்றதும்...  திமுகவோடு திரைமறைவு பேரம் நடத்தி தன் மீதான வழக்கை மட்டும் திரும்ப பெற வைத்திட்ட துரோக தினகரனின் மொத்த முகமூடியும் அன்றே கிழிந்தது.

இப்போதும் டோக்கனார் தான் திமுகவின் ஸ்லீப்பர் செல் என்பதும், செந்தில் பாலாஜியும் கலைராஜனும் திமுகவுக்கு அவராலே அனுப்பி வைக்கப்பட்ட ஆட்கள் தான் என்பதும் தெளிவுக்கு வந்திருக்கு இப்போது தெருவுக்கும் தெரிஞ்சிருக்கு.

 உண்ணவும் நினையாது உடைத்து, உறங்கவும் முனையாது விழித்து தன் உடல் பேணாது , தன் நலன் பாராது ஓடி ஓடி அலைந்து ஊரெங்கும் பிரச்சாரம் புரிந்து பாசத்தால் வெற்றிபெற்ற வைத்த 18 பேரின் பதவிகளை பதராக்கி முடித்துவிட்டு.

குக்கருக்கு ஓட்டு போட்டுவிட்டு, வா பத்தாயிரம் வாங்கி போய் என்று ஹவாலா அரசியல் மூலம் ஆர்கேநகர் மக்களை ஏமாற்றிய அன்னியச் செலாவணி மோசடி பேர்வழியின்  திமுகவுடனான திரைமறைவு பேருமே, உள்ளாட்சியில் அதைத் தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலிலும் வேட்பாளர்களை நிறுத்தி ஓசி பிரியாணி கட்சிக்கு ஒத்தாசை செய்ய வேண்டும் என்பதே இந்த தீய சக்திகளின் திரைமறைவு பேரங்கள்.

இப்போது மொத்தமும்  தெரிஞ்சிருச்சு இருக்கு அமமூக்கனின்  கட்சி கொ.ப.செ சொல்வது போல, ஃ பெரா மோசடியும் பெட்டைத்தன, அரசியலும் டோக்கன் செல்வரின் வாழ்க்கை என்பதில் முத்தமிழ் பூமியும் முடிவுக்கே வந்துருச்சு... என இவ்வாறு கிழித்து கடாசியுள்ளனர்.