நாம் தான் ஆட்சியில் இல்லையே, அதனால் கெட்டதகூட தைரியமாக நீங்கள் செய்யலாம் என தலைவிரித்தாடும் பிசாசுகளுக்கு வெறியேற்றி விட்டிருக்கிறார் ஸ்டாலின் என அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் " இப்படி அக்கிரமத்தின் உச்சம் தொட்டு தன் கட்சி தொண்டர்களை குண்டர்களாக்கும் விதத்தில் உசுப்பேத்தி விட்டிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஏற்கனவே ஆங்காங்கே திமுகவினர் ஓசி பிரியாணிக்கு பாக்சிங் போடுவதும், ஓசி தேங்காய்க்கு ஊமகுத்து குத்துவதும், பியூட்டி பார்லர் பெண்ணிடம் லெக் பாக்சிங் போடுவதும், பயணித்த ஆட்டோவுக்கு பணம் கொடுங்காமல் ஆட்டய போடுவதும் என அட்டூழியங்களின் உச்சம் தொட்ட அரக்கர்களாக வளம்வரும் நிலையில், அவர்களை ஒரு தலைவனாக இருந்து அறிவுறுத்தி திருத்துவதற்கு பதிலாக நாம் தான் ஆட்சியில் இல்லையே, அதனால் கெட்டதகூட தைரியமாக நீங்கள் செய்யலாம் என தலைவிரித்தாடும் பிசாசுகளுக்கு வெறியேற்றி விட்டிருக்கிறார் ஸ்டாலின்.

என்ன செய்வது 1952-களிலேயே தூத்துக்குடியில் திமுக தொண்டர் அண்ணாசாமி என்பவர் அரசியல் காரணத்தால் படுகொலை செய்யப்பட்டபோதும் இதெல்லாம் அரசியல்ல சகஜம் என்று கருத்து சொன்னவர்தான் கொலையும், கொள்ளையும் ஒருவகை கலையே என்று தீமைக்கு தன் திரைப்படங்கள் மூலம் உரம் போட்ட உத்தமர் கருணாநிதி.

இன்றைக்கு அவர் பெற்றெடுத்த பிள்ளை ஸ்டாலினும் அப்பனுக்கு தப்பாதவராக வன்முறைக்கு தூபமிடுகிறார். அப்பாவித் தொண்டர்களை அக்கிரமம் செய்ய உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கிறார். இப்ப சொல்லுங்க. திமுக ஒரு தடை செய்யப்பட வேண்டிய பாசிச இயக்கம் தானே என கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.