nallakannu refuse makkal neethi mayyam meeting

காவிரி விவகாரம் தொடர்பாக மே19இல் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். அந்த கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கமல் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கூட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லகண்ணு தலைமை தாங்க உள்ளாரென அவர் தெரிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக கமல்ஹாசன் தற்போது பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல் மற்ற தலைவர்களுக்கு போனில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார்.

ஸ்டாலினை சந்தித்த அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், காவிரி ஆலோசனை கூட்டத்திற்காக தலைவர்களை சந்தித்து அழைத்து வருகிறேன், நடிகர் ரஜினிகாந்த், ஆளும் கட்சி தலைவர்கள் ஆகியோரையும் சந்திக்க இருப்பதாக கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.

தற்போது நல்லகண்ணு தலைமையேற்க ஒப்புதல் அளிக்கவில்லையென இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறுகிறது.திமுக அழைக்கும் கூட்டங்கள் தவிர வேறு கட்சிகள் அழைப்பை நல்லகண்ணு ஏற்கச்சொல்லவில்லையென முத்தரசன் கூறியுள்ளார் இதை பத்திரிகையாளர்கள் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனிடம் கேட்ட போது விவசாய நண்பர்கள் நல்லகண்ணு வருவதாக தெரிவித்தார்கள் அதனால்தான் அவரை தலைமையாக போட்டோம், ஏன் வரவில்லையென்பதை அவரிடம்தான் கேட்கவேண்டும் பதில் கூறினார்.