Asianet News TamilAsianet News Tamil

பாமக செய்தி தொடர்பாளரை லெப்ட் ஹேண்டில் டீல் செய்த நக்கீரன் பிரகாஷ்..! மோதலாக மாறிய விவாத நிகழ்ச்சி..!

இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நீங்கள் என்ன மரியாதை கொடுத்தீர்கள் என்பதைத்தான் உலகம் பார்த்துக் கொண்டு இருக்கின்றது. 

Nakkeeran Prakash who dealt with Pamaka spokesperson in left hand ..! Controversial debate show ..!
Author
Tamil Nadu, First Published Nov 28, 2021, 10:59 AM IST

வன்னிய சமூக மக்களின் முக்கியத்துவத்தை அரசுக்கு உணர்த்த நினைக்கிறதா பாமக? என்ற தலைப்பில் தனியார் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பாமக செய்தித்தொடர்பாளர் வினோபா, பத்திரிக்கையாளர் தாமோதரன் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்ச்சி மோதலாக மாறியது. Nakkeeran Prakash who dealt with Pamaka spokesperson in left hand ..! Controversial debate show ..!

அப்போது பேசிய வினோபா ‘மருத்துவர் ராமதாஸ் அவர்களை சமூக நீதி பற்றி கேலி செய்து பேசுவதற்கு யாருக்கும் அருகதை கிடையாது. அவரைப் பற்றி யாருக்கும் பேசுவதற்கு தகுதி இல்லை’’எனக் கூறினார். அப்போது இடைமறித்த தமோதரன் பிரகாஷ் ’அவரைப் பற்றி யாரும் பேச கூடாதா? இதுதான் பொடா இதுதான் தடா. இட ஒதிக்கீடு போராட்டத்திற்காக சுட்டுக்கொல்லப்பட்ட தியாகி தியாகிகள் தான் பாவம். உங்களைவிட உணர்ச்சிகள் எங்களுக்கு அதிகம்.

இதையும் படிக்கவும்:- அசால்ட்டா இருக்காதீங்க அடிச்சித் தூக்கிடும்.. ஓமைக்ரான் வைரஸ் பற்றி பதைப்பதைக்கும் அன்புமணி..!

 இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நீங்கள் என்ன மரியாதை கொடுத்தீர்கள் என்பதைத்தான் உலகம் பார்த்துக் கொண்டு இருக்கின்றது. வினோபா, நீங்கள் பேசுவதற்கு மட்டும் இந்த அரங்கம் கிடையாது. இதில் பங்கேற்ற அனைவரும் பேச உரிமை உள்ளது. உங்களை வெறுப்பிற்கு நாங்கள் அசர மாட்டோம்’’ எனத் தெரிவித்தார்Nakkeeran Prakash who dealt with Pamaka spokesperson in left hand ..! Controversial debate show ..!

அடுத்து பேசிய வினோபா, ‘’2006இல் 20% தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தோம். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு போராட பாமக தயாராகிவருகிறது. தாமோதரன் பிரகாஷுக்கு சமூகநீதி பற்றி என்ன தெரியும்? இவர் எத்தனை சமூகநீதி கட்டுரைகளை எழுதி இருக்கிறார். இவரை இந்த விவாதத்திற்கு பத்திரிகையாளர் என்ற பெயரிட்டு இருக்கிறீர்கள். இவருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. நான் ஒரு வழக்கறிஞர் இருந்து மூன்று சமூக நீதிக்காக போராடி இருக்கிறேன். சமூக நீதி பற்றிய வரலாறு தெரியாமல் சமூக நீதி என்றால் என்னவென்றே தெரியாமல் ஒரு சமூக நீதி தலைவரை, ஒரு போராட்டத்தை, ஒரு இயக்கத்தை தவறாக பேசக்கூடாது. 

இதையும் படிக்கவும்:-  அமைச்சராக இருந்தால் அரசியல் நாகரிகம் வேண்டாமா..? கே.என்.நேருவுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்..!

நாங்கள் என்ன செய்தோம் என்று கேட்கிறார் தாமோதரன் பிரகாஷ். மத்திய அமைச்சராக இருந்து எங்கள் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சேவை செய்யவில்லையா? சாதனை படைக்க வில்லையா? எனத் தெரிவித்த உடனே இடைமறித்த தாமோதரன் பிரகாஷ், ‘’உங்கள் சின்னய்யா மீது மருத்துவ கல்லூரி ஊழல் இருக்கிறதே’’ என்று குற்றம் சாட்டினார். https://www.facebook.com/watch/?v=2657189207916432

இதையும் படிக்கவும்:- ஆளுநர் ஒன்றை சொல்கிறார்.. முதல்வர் ஒன்றை சொல்கிறார்.. முரண்பாடால் எழுந்தது சர்ச்சை..!

 ’’இந்த மாதிரி பத்திரிகையாளர்களை எல்லாம் மக்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யார்? இவர்கள் பின்னணி என்ன? என்பதை மக்கள் அறிந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் நோக்கத்தையும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதே என்று கூறுகிற தாமோதரன் பிரகாஷ். நிகழ்ச்சியில் உட்கார்ந்து கொண்டு அவர்களுக்கு அணத்து கேள்விக்கும் கேட்டால் அதற்கு என்ன பதிலடி கொடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்’’ என்றார் வினோபா

Follow Us:
Download App:
  • android
  • ios