Asianet News TamilAsianet News Tamil

ஆளுநர் ஒன்றை சொல்கிறார்.. முதல்வர் ஒன்றை சொல்கிறார்.. முரண்பாடால் எழுந்தது சர்ச்சை..!

ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் நீட் என்ற வார்த்தைக்கூட இடம் பெறவில்லை. தமிழக அரசு வெளியிட்ட அரசு செய்திக் குறிப்பும், ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பிலும் மாறுப்பட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 
 

The governor says something .. The chief minister says something .. Controversy arose over the controversy .. Where can this go.?
Author
Chennai, First Published Nov 28, 2021, 9:56 AM IST

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி - முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு தொடர்பாக மாறுப்பட்ட தகவல்கள் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் என்.ஆர்.ரவியை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன் சென்று நேற்று சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பு முடிந்த சிறிது நேரத்தில் அதுகுறித்த புகைப்படங்களும் செய்தியும் அரசு தரப்பில் வெளியிடப்பட்டது. நீட் விலக்குக் கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மூக ஊடகங்களில் தமிழக முதல்வர் பக்கத்திலும் அதே தகவல்கள்தான் தெரிவிக்கப்பட்டிருந்தது.The governor says something .. The chief minister says something .. Controversy arose over the controversy .. Where can this go.?

தமிழக அரசு தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு தொடர்பாக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை முதல்வர் அமைத்தார். இக்குழுவானது, நீட் தேர்வு குறித்து பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்தது; மாணவர் சேர்க்கை குறித்த தகவல்களை தீர ஆராய்ந்தது. சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கி அவற்றை அகற்றிட மாற்று மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைகளை அளித்தது.

குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 13 அன்று தமிழக சட்டப்பேரவையில், ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை மசோதா' நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையை கருத்தில் வைத்து, குடியரசுத் தலைவர் ஒப்புதலை விரைவில் பெற, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.” எனக் கூறப்பட்டிருந்தது. The governor says something .. The chief minister says something .. Controversy arose over the controversy .. Where can this go.?

ஆனால்,. இச்சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகையும் செய்திக்குறிப்பை வெளியிட்டது. அந்தச் செய்திக்குறிப்பில், “ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது, ‘மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் நீட் என்ற வார்த்தைக்கூட இடம் பெறவில்லை. தமிழக அரசு வெளியிட்ட அரசு செய்திக் குறிப்பும், ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பிலும் மாறுப்பட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios