சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை . மக்கள் பிரச்சினையை சட்டப்பேரவையில் பேசுவதில்லை. பாஜகவின் அண்ணாமலை மட்டுமே துணிச்சலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே என நயினார் நாகேந்திரன் பேசியிருந்தார்.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதுதான் பாஜகவோடு கூட்டணி இல்லாததற்கு காரணம் என அதிமுகவை சேர்ந்த விந்தியா கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும்கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. சட்டப்பேரவையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை . மக்கள் பிரச்சினையை சட்டப்பேரவையில் பேசுவதில்லை. பாஜகவின் அண்ணாமலை மட்டுமே துணிச்சலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே என நயினார் நாகேந்திரன் பேசியிருந்தார்.

நயினார் நாகேந்திரனின் பேச்சு சர்ச்சையான நிலையில், அதிமுகவினர் கொந்தளித்தனர். குறிப்பாக அதிமுகவில் பதவி சுகம் அனுபவித்துவிட்டு பாஜகவில் சென்று விட்டு இப்படி பேசுவது வாய் கூசவில்லையா என விமர்சித்தனர். மேலும், ஆண்மை இருந்தால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனியாகப் போட்டியிட்டு ஆண்மையை நிரூபியுங்கள் என்று சமூக ஊடகங்களில் அதிமுகவினர் நயினார் நாகேந்திரனுக்கு பதிலடி கொடுத்தனர். ஆனால், இதுவரை அதிமுக தலைவர்கள் இதுதொடர்பாக வாய் திறக்கவில்லை.

இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில் நயினார் நாகேந்திரனின் கருத்து பாஜகவின் நிலைப்பாடு கிடையாது. நயினார் நாகேந்திரனுக்கே அதில் உடன்பாடு கிடையாது. அவர் சொல்ல வந்த விஷயம் வேறு. ஆனால், வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தேன் என்று கூறியிருந்தார். ஆனாலும், அதிமுக தொண்டர்கள் ஆத்திரம் அடங்காமல் இருந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டால் சரிவராது. அதிமுக தொண்டர்கள் பாஜகவுக்கு எதிராக உள்ளடி வேலைகளை செய்வார்கள் என்பதால் பாஜகவை கழற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் விந்தியா கூறுகையில்;- தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதுதான் பாஜகவோடு கூட்டணி இல்லாததற்கு காரணம். சிறுபான்மையினர் வாக்கு வங்கி பற்றிய பயம் இருந்திருந்தால் சட்டப்பேரவை தேர்தலை தனியாக எதிர்கொண்டு இருப்போம். நயினார் நாகேந்திரன் பேசியது போல இனிமேல் யாராவது பேசினால் தக்க பதிலடி கொடுப்போம். அடிக்கடி மன்னித்து கொண்டே இருக்க முடியாது என்று விந்தியா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
