Nagma sung at the Women Congress meeting

புதுச்சேரி சோரப்பட்டு கிராமத்தில் மகளிர் காங்கிரசாருக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி முகாமில், மகளிர் காங்கிரஸ் பொது செயலாளர் நக்மா கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், அடுத்து பிரதமராக வரக்கூடிய தகுதி ராகுல் காந்திக்கு மட்டுமே உள்ளது என்றார். அதற்கு காங்கிரசார் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் நக்மா கூறினார்.

காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசிக் கொண்டிருந்த நக்மா, திடீரென நடிகர் ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் வரும் பாடல் ஒன்றை பாடினார். நீ நடந்தால் நடை அழகு, ஸ்டைலு ஸ்டைலுதான் என்ற பாடல்களைப் பாடினார். 

இந்த இரு பாடல்களையும் பாடிய நக்மாவை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பாடலை பாடி முடித்த பின் பேசிய நக்மா, இந்த பாடல் ரஜினிக்கு அல்ல என்றும் ராகுல் காந்திக்கு என்றும் கூறினார்.