திருமாவளவனின் ஒவ்வொரு அசைவிற்கு பின்பு தொல் தமிழனின் வரலாற்று கூறுகள் இருக்கும். ஆம் இந்த நாகம் இந்துத்துவத்தின் அடையாளம் அல்ல பெளத்த அடையாளம்

முஸ்லீம்களை, கிருத்தவர்களை தாய் மதம் திரும்ப சொன்னால்,"இந்துக்கள் தாய் மதமான புத்த மதம் திரும்ப வேண்டும் என்று முன்பொருமுறை கூறியிருந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து இருந்தார். 

தான் புத்த மதத்தை சார்ந்தவன் எனக் கூறிக் கொள்பவர். நாகர்கள் இந்திய துணைக்கண்டம் முழுவதும் வாழ்ந்தவர்கள், நாகர்கள் தமிழர்களே என்று புரட்சியாளர் ஆய்வு செய்த்து உலகத்திற்கே அறிவித்து இருக்கிறார். இதனையே திருமாவளவன் உலக செம்மொழி மாநாட்டில் அம்பேத்கரின் ஆய்வை முன்வைத்து உலக தமிழர்களுக்கு தமிழ் அறிஞர்களுக்கு மீண்டும் எடுத்து சொல்லி அம்பேத்கரின் புகழை பரப்பி இருக்கிறார். திருமாவளவனின் ஒவ்வொரு அசைவிற்கு பின்பு தொல் தமிழனின் வரலாற்று கூறுகள் இருக்கும். ஆம் இந்த நாகம் இந்துத்துவத்தின் அடையாளம் அல்ல பெளத்த அடையாளம் என விசிகவினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’பௌத்தம் நாகர்களின் வாழ்வியல் நெறி. நாகம் பௌத்தத்தின் குறியீடு. புத்தர் நாகவம்சத்தின் ஞானமுதல்வன். கழுத்தில் நாகத்துடன் சிவன். ஆதிசேஷன் படுக்கையில் அரங்கன். இவை பௌத்தத்தின் திரிபுகளாக பரிணமித்த குறியீடுகளோ? புத்தரும், நாகமும் வைதீகப் பகையே. நாகவம்சம் உலகை உய்விக்கும் ஞானவம்சம்’’ எனத் தெரிவித்துள்ளார். அதாவது பெளத்தம் என்பது நாகர்களுடையது. நாகம் என்பது பெளத்த மதத்தின் குறியீடு. ஆனால் நாகத்தை சிவன் கழுத்தில் சுமந்துள்ளார். ஆக பெளத்த மதத்தை திரித்து அவற்றை இந்து கடவுளாகிய சிவனுக்கு உரியதாக மாற்றிவிட்டார்கள் என்கிற அடிப்படையில் இந்த கருத்தை அவர் பதிந்துள்ளார். 

Scroll to load tweet…


இதற்கு கருத்து தெரிவித்துள்ள வலைஞர்கள், ‘’பாம்பு மாத்திரையின் திரிபுதான் புத்தரோ...?? அமைதியை விரும்பிய புத்தரை... கலகம் மூட்டுவது ஒன்றையே குழத்தொழிலாக கொண்டுள்ள நீங்கள் கொண்டாடுவது எல்லாம் என்ன மாதிரி டிசைன்ன்னு தெரியவில்லை. கிறிஸ்துவரா மாறி, அங்கே மரியாதை கிடைக்காததால் இப்பொழுது புத்த மதத்திற்கு மாற போகிறீர்களா? உண்மையான நோக்கம், இந்து மத அடையாளங்களை அளிப்பது’’ எனத் தெரிவித்துள்ளனர்.