கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரி இல்லாமல் இருந்து வரும் நடராஜன் மூன்று மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு,அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு,செயற்கை உறுப்பு மாற்று  அறுவை சிகிச்சை  செய்யப்பட்டது

அதனை  தொடர்ந்து,மெல்ல மெல்ல உடல் நலம் தேறிவந்த  நடராஜன் உடல் நிலை மீண்டும் பாதிக்கப்பட்டு உள்ளது

இந்நிலையில்,மருத்துவமனையில் தொடர் தீவிர சிகிச்சையில் இருந்து வரும் நடராஜனை காண சசிகலா பரோல் கேட்டு மனு அளித்துள்ளார்.

 

மேலும், நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக,அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில்,நடராஜனுக்கு தற்போது செயற்கை சுவாச காற்று அளிக்கும் உபகரணங்கள்(ventilator)  பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,அவருடைய உடல் நிலை கிரிடிக்கல்(critical) என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.