நாம் தமிழர் கட்சி தம்பி ஒருவர் அண்மையில் மதம் மாறி சைவ தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இதற்கு கண்டனம் தெரிவித்து தம்பியின் மதத்தை சார்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தனது குமுறல்களை கொட்டிய சீமானின் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

அந்த ஆடியோவில் தொண்டைக்கு உள்ளே பெரிய கட்டி வந்து புண்ணாக இருக்கு பேசவே பேசாதீங்க இதுக்கு மேல பேசினா அறுவை சிகிச்சையில் கொண்டு போய் விட்டுடும், ஒரு மாதம் ஓய்வெடுங்கள் என்று சொன்ன காலத்தில் தான் இந்த குடியரிமை சட்ட திருத்த போராட்டம் வந்தது. தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருந்தேன். ரத்த வழிய பேசிக்கொண்டே தான் இருந்தேன். மருத்துவர்கள் எல்லாம் எனக்கு அறிவுரை சொல்லி சோர்ந்துவிட்டார்கள். இவர இனி எதுவும் பண்ண முடியாது. அந்த வலியோடு தான் இரண்டு மூன்று கூட்டங்களின் பேசினேன். 

அப்போது, நமது உடல்நலத்தையும் விட நமக்கு உணர்வு, உரிமை, உறவு முக்கியம் என்பதால் தான் நாம் வந்து நிற்கிறோம். அது புரியாமல் சும்மா பழி சுமத்திக்கொண்டு இருக்கிறார்கள். சரிங்க நான் சரி இல்லைங்க, நான் தப்பானவன், என்னை பிடிக்கல, நான் இப்படி செஞ்சிடுவேனோ அல்லது அப்படி செஞ்சிடுவேனோன்னு  உங்களுக்கு சந்தேகம் இருந்தால் என்னை விட்டு விடுங்கள். நான் இதுவரை 2 தேர்தலை சந்தித்துவிட்டேன். 2016 மற்றும் 2019 எத்தனை பேர் எனக்கு வாக்கு செலுத்தி உள்ளீர்கள். அல்லா மீது  ஆணையாக சொல்லுங்கள். அவர் நம்மை பிரித்து விடுகிறார்கள். 

நீங்கள் கவனமாக இருங்கள். இமானை அழிக்கிறார் சீமான். இமான், சீமான் பேசுவதற்கு வசதியாக இருப்பதால் பேசுவதா. அதுக்கு வந்தவனா நான். இன்ன இது புதுமையாக இருக்கு. நான் மதம் மாற்றி விட்டுவிடுவேனா நீங்கள் என்ன அவ்வளவு பலவீனமா இருக்கீங்களா. சும்மா குறை சொல்ல வேண்டும் என்பதால் குறை சொல்லாதீங்க. ஒரு பரிதாபப்பட்டவன் கிடைச்சிருங்கா என்பதால் வரவ, போரவ எல்லாம் அடிக்கக்கூடாது.

இதே வேலையா?. எதுவாக இருந்தாலும் பிரச்சனை. ஒரு பக்கம் எப்போ பார்த்தாலும் இஸ்லாமியர்களுக்காக பேசுராரு என்று எல்லாம் என்ன தூத்துராங்க. ஒரு பக்கம் இவரு இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்காருன்னு நீங்கள் எல்லாம் தூத்துறீங்க. நான் யாருக்கு தான் ஆதரவு எனக்கு ஒண்ணுமே புரியல, தெரியல.