Asianet News TamilAsianet News Tamil

’மாறா...’ நன்மாறா... 2 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தும் எளிமை மாறா.. தற்காலிக அரசியலில் இப்படியொரு அரசியல்வாதியா?

சிறு வயது முதல் பொதுவாழ்வில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினராக மக்களால் இரண்டு முறை தேர்வு செய்யப்பட்ட என்.நன்மாறன், இலவச வீடு கேட்டு மனு அளித்து அழைந்தது அனைவரையும் அதிரச் செய்தது.

N. Nanmaran died due to ill health
Author
tamil nadu, First Published Oct 28, 2021, 5:38 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.நன்மாறன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 2 முறை சட்ட மன்ற உறுப்பினராக பதவி வகித்தவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.நன்மாறன் உடல்நலக்குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.N. Nanmaran died due to ill health

இதனிடையே மருத்துவமனைக்கு நேரில் சென்று அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.

உள்ளாட்சி நிர்வாகங்களில் கவுன்சிலராக ஒருமுறை பணியாற்றினாலே நான்கைந்து தலைமுறைக்குச் சொத்து சேர்த்துவிடுவது தற்போதைய அரசியல் களத்தின் நிலை. இந்நிலையில், சிறு வயது முதல் பொதுவாழ்வில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினராக மக்களால் இரண்டு முறை தேர்வு செய்யப்பட்ட என்.நன்மாறன், இலவச வீடு கேட்டு மனு அளித்து அழைந்தது அனைவரையும் அதிரச் செய்தது.N. Nanmaran died due to ill health

இதையும் படியுங்கள்:- #BREAKING சசிகலாவுக்கு ஆதரவு.. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகி.. ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி..!

பொது வாழ்க்கையில் ஈடுபடுகிறவர் எப்படி எளிமையாக இருக்க வேண்டும், எப்படி இயங்க வேண்டும் என்று நம்முன் வாழும் விரல்விட்டு எண்ணக்கூடிய அரசியல்வாதிகளில் சி.பி.எம்-மைச் சேர்ந்த மறந்த நன்மாறன் முக்கியமானவர்.

சிறு வயதில் தொழிற்சங்கவாதியாகப் பணியாற்றி, அதன் நீட்சியாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகியாகப் பணியாற்றிவர். கலை, இலக்கியப் பிரிவான த.மு.எ.க.ச-வில் பணியாற்றியவர். பல நூல்களையும் எழுதியிருக்கிறார். நகைச்சுவை கலந்த அவருடைய எளிமையான மேடைப்பேச்சால் `மேடைக் கலைவாணர்’ என்று அழைக்கப்பட்டவர்.

இரண்டு முறை மதுரையில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி, எம்.எல்.ஏ பென்ஷன் வாங்கினாலும், அதைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சி கொடுக்கும் அலவன்ஸ் மூலம் வாழ்ந்து முடித்தவர்.N. Nanmaran died due to ill health

பிள்ளைகள் தனித்தனியாக வசித்துவந்த நிலையில், மதுரை மேலப்பொன்னகரத்தில் மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்துவந்த அவர், வாடகை கட்டுப்படியாகததால் அரசு வழங்கும் இலவச வீட்டுக்கு கலெக்டரிடம் மனு அளித்தார். 

இதையும் படியுங்கள்:-கோயில் நகைகளை உருக்க கூடாது.. நீதி மன்றம் போட்ட அதிரடி நிபர்ந்தனை. ஆடிப்போன இந்து அறநிலையத்துறை.

எப்போதும் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு அதிகாரிகளிடம் மனு அளிப்பது, அவர்களின் போராட்டங்களில் கலந்துகொள்வது என்று தன் உடல்நலத்தையும் பாராமல் இயங்கிவந்தவர் நன்மாறன். அவரது எளிமையை வெளிக்காட்டும் ஒரே ஒரு நிகழ்வு, ‘’கடந்த ஆண்டு பேருந்து ஏற முயற்சித்த போது நன்மாறன் ஒரு செருப்பை தவறவிட்டார். அதை எடுக்க நன்மாறன் ஓடி வந்தார். ஆனால், பேருந்து நிற்காமல் கடந்து சென்றது.

இதை அருகில் இருந்து பார்த்த ஆட்டோ ஓட்டுநர் பாண்டியன், இது நன்மாறன் அய்யாவாச்சே... என பதறியபடி அவரை தமது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டார். அப்போதும் கூட என்னிடம் ரூ20 தானே இருக்கிறது என பதறியிருக்கிறார் நன்மாறன். அதை பற்றி கவலைப்படாதீர்கள் என்று சொன்னபடியே நன்மாறன் செல்ல வேண்டிய இடத்தில் கொண்டு போய்விட்டார் ஆட்டோ ஓட்டுநர் பாண்டி. அந்த அளவுக்கு எளிமையானவராக இருந்தார் நன்மாறன்.

Follow Us:
Download App:
  • android
  • ios