யாரெல்லாம் நம்புனாரோ அவங்கலாம் கேப்டன முதுகுல குத்திட்டாங்க! என்னோட அரசியல் ரோல் மாடல் ஜெயலலிதா! பிரேமலதா.!
அரசியலில் இருப்பதே சவால் தான். குறிப்பாக பெண்கள் அரசியலில் இருப்பது மிகப்பெரிய சவால். அதற்கு உதாரணம் ஜெயலலிதா. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனக்கு அரசியல் ரோல் மாடல். அவருடைய தைரியமும் தன்னம்பிக்கையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
விஜயகாந்த்தை திருமணம் செய்து கொண்ட நாள் முதல், தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமல்லாமல், அன்னையாகவும் இருந்துள்ளேன் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அரசியலில் இருப்பதே சவால் தான். குறிப்பாக பெண்கள் அரசியலில் இருப்பது மிகப்பெரிய சவால். அதற்கு உதாரணம் ஜெயலலிதா. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனக்கு அரசியல் ரோல் மாடல். அவருடைய தைரியமும் தன்னம்பிக்கையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.
2011 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவரான மூன்றே மாதத்தில் யாரை எல்லாம் நம்பி எம்எல்ஏ பதவி கொடுத்தாரோ அவர்கள் எல்லோரும் கேப்டன் முதுகில் குத்திவிட்டு துரோகம் செய்தனர். அதற்கு பிறகு நடந்த ஒவ்வொரு விஷயமும் ஒரு பெரிய சறுக்கலை தேமுதிகவுக்கும் கேப்டனுக்கும் கொடுத்தது. அந்த வலிதான் கேப்டனின் உடல்நிலை மோசமாக காரணம் என வேதனையுடன் தெரிவித்தார்.
பொதுச்செயலாளராக நான் தேர்வானது திடீரென எடுத்த முடிவல்ல. விஜயகாந்தின் உத்தரவுப்படியே தேமுதிகவின் செயல்பாடுகள் எப்போதும் இருக்கும். மேலும் விஜயகாந்த்தை திருமணம் செய்து கொண்ட நாள் முதல், தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமல்லாமல், அன்னையாகவும் இருந்துள்ளேன். தொண்டர்களுக்காக நிச்சயமாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் வெற்றி வியூகம் ஒன்றை மட்டுமே அமைப்போம். அதில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
மேலும் பேசிய அவர் ஆளுநர் அவருக்கான பணியை செய்து கொண்டு இருக்கிறார். முதலமைச்சர் அவருக்கான பணியை செய்து கொண்டு இருக்கிறார். இதில், ஆளுநர் சொல்வது எல்லாம் தவறு என்று சொல்ல முடியாது. முதலமைச்சர் சொல்வது எல்லாம் சரி என்றும் சொல்ல முடியாது என பிரேமலதா கூறியுள்ளார்.