தமிழகத்தில் பாஜகவை அரங்கேற்றாமல் என் உயிர் போகாது  என தமிழிசை உருக்கமாக பேசிய இந்த கருத்தை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

தமிழகத்தில், பாரதிய ஜனதா கட்சியை அரியணையில் ஏற்றாமல் என் உயிர் போகாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் கலாய்த்து, கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ராஜபாளையத்தில், தமிழக பாஜக தலைவர் பங்குபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 22 மாநிலங்களில் ஆட்சி செய்துவரும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்ற முடியாது என்றும், திமுக கட்சிக்கு தமிழகத்தைத் தாண்டினால் முகவரி கிடையாது என்றும் கூறினார். 

கடந்த ஆண்டு நடந்த ஆர்கே நகர் இடைத் தேர்தலில் பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. ஆனாலும் பாஜகவை ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று நோட்டா 5-வது இடத்தை பிடித்தது. பிஜேபி வேட்பாளர் 1368 வாக்குகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார்.

தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் நாம் (பாஜக) செயல்படுகிறோம். தமிழகத்தில் கூட்டணியும் கிடையாது. தமிழகத்தில் தேர்தல் பணிகளை ஆரம்பிக்க வேண்டும். வருங்காலத்தில் பா.ஜனதா இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலமையை உருவாக்க வேண்டும். திராவிட கட்சிகளுக்கு எதிராக பணியாற்ற வேண்டும் என்றார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை அரியணையில் ஏற்றாமல் என் உயிர் போகாது என்றும், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த ஆர்கே நகர் இடைத் தேர்தலில் பிஜேபிக்கும் நோட்டாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. ஆனாலும் பாஜகவை ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று நோட்டா 5வது இடத்தை பிடித்தது. பிஜேபி வேட்பாளர் 1368 வாக்குகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார். இப்படியிருக்க எப்படி தமிழகத்தில் பிஜேபியை கட்சியை அரியணையில் ஏற்றாமல் என் உயிர் போகாது என பேசியிருப்பதை சமூக வலைத்தளங்களில், நெட்டிசன்கள் வெகுவாக கலாய்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…