தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் அதற்கு இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி முழு ஆதரவளிக்கும் பங்கேற்கும்  மாநில செயலாளர் முத்தரசன்  பேட்டியளித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்பதற்காக  லட்சக்கணக்கான இளைஞர்கள் மாணவர்கள் தமிழகம் முழுதும் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர்.


மாணவர்கள் இளைஞர்கள் போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளித்து வருகின்றனர்.  சென்னை சேப்பாக்கத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது.


 இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது: 
 தமிழர்களின் பண்பாட்டை குலைக்கும் சதியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது நாட்டு மாடுகள் இனத்தை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறி நடந்த்தினால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார்.