Asianet News TamilAsianet News Tamil

இதெல்லாம் தான் உங்க சாதனையா? பிஜேபியின் 100 நாள் சாதனையை லிஸ்ட் போட்டு வெறுப்பேத்தும் முத்தரசன்...

மோடி அரசின் இரண்டாவது ஆட்சியில் நூறு நாட்கள் கடந்ததை பா.ஜ.க பெரும் சாதனையாக கொண்டாடி வருகின்றது. மக்களை வதைக்கும் வேலையை தான் சாதனையாக செய்து வருகிறது என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்தநிலையால் தொழில்நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு எல்லாம் மூடுவிழா நடைபெற்று வருவாதகாவும் இதுவும் மோடி அரசின் 100 நாள் சாதனைகளில் ஒன்று என கடுமையாக விமர்சித்துள்ளார் முத்தரசன். 

mutharasan criticise bjp 100 days success
Author
Chennai, First Published Sep 10, 2019, 2:29 PM IST

மோடி அரசின் இரண்டாவது ஆட்சியில் நூறு நாட்கள் கடந்ததை பா.ஜ.க பெரும் சாதனையாக கொண்டாடி வருகின்றது. மக்களை வதைக்கும் வேலையை தான் சாதனையாக செய்து வருகிறது என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்தநிலையால் தொழில்நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு எல்லாம் மூடுவிழா நடைபெற்று வருவாதகாவும் இதுவும் மோடி அரசின் 100 நாள் சாதனைகளில் ஒன்று என கடுமையாக விமர்சித்துள்ளார் முத்தரசன். 

அதில் கூறியுள்ளதாவது, “இரண்டாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பா.ஜ.க. நூறு நாட்கள் சாதனை என கொண்டாடி மகிழ்கின்றது. நூறு நாட்களுக்குள்ளாக எழுபது ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மோட்டார் வாகன தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி தொழில் தொடரமுடியாமல் மூடுவிழா நடத்திக் கொண்டுள்ளன. முன் எப்போதும் கண்டிராத வேலையின்மை நீடிப்பதுடன் தொழில்கள் மூடல் காரணமாக மேலும் அதிகரித்துள்ளது. வேளாண்மை, தொழில் என அனைத்தும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.

mutharasan criticise bjp 100 days success

கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. ஜம்மு-காஷ்மீரத்து மக்கள் திறந்த வெளிச் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். தன்னை பத்து மாதம் சுமந்து பெற்று வளர்த்து, ஆளாக்கிய அன்னையைக் காணவும், அவரது அன்பைப் பெறவும் மகளுக்கு உரிமையின்றி, உரிமை கேட்டு நீதிமன்றம் நாட வேண்டியுள்ளது. எதிரி நாட்டு படைகள், நமது தேசத்தில் அத்துமீறி புகுந்து, ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுத்து, நமது மண்ணையும், மக்களின் உயிரையும் காக்க வேண்டிய நமது இராணுவ வீரர்கள் லட்சத்திற்கும் மேற்பட்டோர், காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் குடியிருப்பை விட்டு வெளியே வந்து விடாமல் தடுத்து நிறுத்தும் பணிக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

காஷ்மீரத்து நமது சகோதரர்கள் தேசத்துரோகிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் அரசியல் தலைவர்கள் என பலரும் சிறைக்காவலில் காரணமின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவைகளையெல்லாம் மிக வசதியான முறையில் மூடி மறைத்து விட்டு பா.ஜ.க. நூறு நாள் விழா எடுத்து, தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறது.

mutharasan criticise bjp 100 days success

இது மட்டுமின்றி, இந்திய அரசுப் பணியில் தேர்ச்சி பெற்று உயர் அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்கள் ஒவ்வொருவரும் தாங்களாகவே ராஜினாமா செய்து வருகின்றனர். டையூடாமன் செயலாளராக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவர் தனது அறிக்கையில் ஜம்மு-காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசு பறித்துவிட்டதாகவும், அவர்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுவதை கண்டித்து, தான் வகிக்கும் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கர்னாடகாவில் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திரு.அண்ணாமலை ராஜினாமா செய்தார். தற்போது கர்னாடகா மாநிலத்தில் பணியாற்றி மக்கள் மத்தியில் சிறந்த அதிகாரி என போற்றப்பட்ட சசிகாந்த் செந்தில் ராஜினாமா செய்துள்ளார். இதுவரை மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய ஆட்சிக்கு எதிராக, தங்களின் மனச்சாட்சிக்கு மதிப்பளித்து ராஜினாமா செய்துள்ளது சாதாரணமான ஒன்றாக கருத இயலாது.

mutharasan criticise bjp 100 days success

வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில், ஆசிரியர்களே, அதிகாரிகளே, வழக்கறிஞர்களே, நீதிபதிகளே ஆட்சிக்கு எதிராக தங்கள் பணிகளை கைவிட்டு வெளியேறுங்கள் என தேசப்பிதா மகாத்மா காந்தி விடுத்த அறைகூவலை ஏற்று அன்று வெளியேறினர். இன்று எந்த அரசியல் கட்சி தலைவரும் அப்படிப்பட்ட அறைகூவலை விடுக்கவில்லை.

ஆனால் அதிகாரிகளும், நீதிபதிகளும் தங்களின் மனச்சாட்சிக்கு அடிபணிந்து ராஜினாமா செய்து கொண்டுள்ளனர். மேலும் தொடரும் அபாயநிலை உள்ளது. இதுதான் பா.ஜ.க. ஆட்சியின் நூறு நாள் சாதனை என்பதனை பா.ஜ.க. உணர்ந்து தன்னை திருத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.” என கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios