பாரதி, காமராஜர், தேவர் என்று அனைத்து தலைவர்களையும் ஜாதி வட்டத்தில் அடைத்து வெறுப்பைப் பரப்பி மக்களைப் பிளவுபடுத்திய திமுக அரசியல் முடிவுக்கு வரவேண்டும் என்று உறுதிமொழி எடுப்போம்’’ என மாரிதாஸ் சூளுரைத்துள்ளார். 

சிறந்த ஆன்மிகவாதியும், நாடாளுமன்ற எம்.பியாக பதவி வகித்தவருமான முத்துராமலிங்கத் தேவரின் 112 வதுஜெயந்தி குருபூஜை அவரது சொந்த ஊரான பசும்பொன்னில் நடைபெற்று வருகிறது. அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாநில அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக அஞ்லி செலுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் அரசியல் விமர்சகர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பதிவில், ‘’மிகச்சிறந்த தேசியவாதியும், ஆன்மீகவாதியுமான முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்திவிழா இன்று. பாரதி, காமராஜர், தேவர் என்று அனைத்து தலைவர்களையும் ஜாதி வட்டத்தில் அடைத்து வெறுப்பைப் பரப்பி மக்களைப் பிளவுபடுத்திய திமுக அரசியல் முடிவுக்கு வரவேண்டும் என்று உறுதிமொழி எடுப்போம்’’எனத் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் மற்றொரு நெட்டிசன் ஒருவர், ‘’சாதி பார்ப்பவன் சண்டாளன் என மேடைக்கு மேடை முழங்கியவரை, சாதிய தலைவராக உருமாற்றியது காலத்தின் சாபம்’’ எனப்பதிவிட்டுள்ளார்.