இந்தியா முழுவதும் இந்திய குடியுரிமைச்சட்டத்தை எதிர்த்து முஸ்லிம் மக்கள் அந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றார்கள். சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லீம் ஆண்கள் பெண்கள் என ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.அங்கு கூடிவர்களை கலைக்க போலீசார் தடிஅடி நடத்தியிருக்கிறார்கள். இதனால் தமிழகம் முழுவதும் இரவு என்று கூட பார்க்காமல் ஆங்காங்கே முஸ்லீம்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


1.மதுரை நெல்பேட்டை அண்ணாசிலை அருகே பெண்கள் சாலை மறியல் செய்ததால் தடிஅடி செய்து கூட்டத்தை கலைத்தனர்.
2.மதுரை விளாங்குடி பள்ளிவாசல் அருகே பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
3.புதுக்கோட்டையில் 200க்கு மேற்பட்ட முஸ்லீம்கள் அண்ணாசிலை அருகே போராட்டத்தில் குதித்தனர்.
4.வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல்.
5.சென்னை, ஈரோடு, கோவை, நெல்லை, புதுக்கோட்டை  ஆகிய மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
6 சென்னையில் முஸ்லீம் அமைப்புகளுடன் சென்னை போலீஸ் கமிசனர் விஸ்வநாதன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
7.சென்னை போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 120 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

T.Balamurukan