Muslims no longer eat this !!! Hyderabad Islamic Organization Announcement

ஐதராபாத்தை சேர்ந்த ‘ஜாமியா நிஜாமியாஸ்’ என்ற அமைப்பு, ‘‘முஸ்லிம்கள் இறால் மற்றும் நண்டுகளை சாப்பிடக்கூடாது. அவை மீன் வகையை சார்ந்தவை அல்ல’’ என கூறி உள்ளது.

மீன் வகை அல்ல

ஜாமியா நிஜாமியாஸ் 1876-ம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். இது நாட்டில் உள்ள பழமையான இஸ்லாமிய கல்லூரிகளில் ஒன்றாகும். தற்போது அந்த அமைப்பு ஜனவரி 1 ந்தேதி ஒரு பத்வா( ஆணை)வை வெளியிட்டு உள்ளது.

அதில், ‘‘இறால்கள் மற்றும் நண்டுகள் மீன் வகைகளின் கீழ்வரவில்லை அதை சாப்பிட வேண்டாம்’’ என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பூச்சி வகையை சேர்ந்தது

இந்த ஆணையை ஜாமியா நிஜாமியாவின் தலைமை முப்தி முகமது அஷீமுதீன் வழங்கி உள்ளார்.

‘‘இறால் முதுகெலும்பற்ற விலங்கு. அது பூச்சி வகையை சேர்ந்தவையாகும். எனவே இது விலக்கப்பட்ட உணவுகளில் வருகிறது. இது முஸ்லிம்களுக்கு கண்டிப்பாக அருவருப்பானது’’ என்றும், அதில் மேலும் கூறப்பட்டு உள்ளது.