இராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் பகுதியில் தங்கையின் வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த கள்ளக்காதலன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது தங்கை அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதை அவரது அண்ணன் கண்டித்துள்ளார். 

இதற்கிடையில்  செந்திலின் தங்கை அதே பகுதியை சேர்ந்த மற்றொருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் செய்து வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் முன்னாள் கள்ளக்காதலன் மீண்டும் அந்தப் பெண்ணிடம் நெருங்கி பழக ஆரம்பித்து தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த பெண் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தொடர்ந்து பலமுறை பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகவும், இந்த தகவல் அந்த பெண்ணின் அண்ணன் செந்தில்குமாருக்கு தெரிந்துள்ளது. இதையடுத்து நேற்று செந்தில்குமார் கடை பகுதியில் நின்றிருந்த ரவி என்பவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். 

இதுகுறித்து சேத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு இராஜபாளையம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் ராஜபாளையம் துணை காவல் கண்காணி ப்பாளர் நாகசங்கர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். அறிந்தோ அறியாமலோ ஒரு பெண் செய்த தவறு, அந்த பெண்ணின்  சகோதரனையே கொலைகாரனாக மாற்றியுள்ளதுடன். ஒரு உயிரும் பறிபோயுள்ளது. தவறான உறவு ஒரே நேரத்தில் அநியாயமாக மூன்று குடும்பத்தில் நிம்பதியை பறித்து விட்டதே என அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.