Asianet News TamilAsianet News Tamil

கொலைக்கார கொரோனா: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடம்.! மிகுந்த சோகத்தில் திமுக உடன்பிறப்புகள்.!!

அன்பழகன் உடல் தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. நேற்று நள்ளிரவு அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனால் திமுக தலைவர் முதல் தொண்டர்கள் வரை மிகுந்த அச்சத்திலும், சோகத்திலும் இருக்கிறார்கள்.

Murder Coroner: DMK MLA J.Appahankal DMK siblings in great sadness !!
Author
Tamilnadu, First Published Jun 5, 2020, 8:41 AM IST

தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், தமிழகத்தில் கொரோனா புயல் வேகத்தில் பரவுகிறது. பொதுமக்கள் முதல் ஆளுநர் மாளிகை வரை சென்ற கொரோனா, தற்பொழுது எம்.எல்.ஏ-வயும் விட்டுவைக்கவில்லை.அன்பழகன் உடல் தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. நேற்று நள்ளிரவு அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனால் திமுக தலைவர் முதல் தொண்டர்கள் வரை மிகுந்த அச்சத்திலும், சோகத்திலும் இருக்கிறார்கள். இன்று அவருக்கான மருத்துவ குழு முக்கியமான தகவலை  வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Murder Coroner: DMK MLA J.Appahankal DMK siblings in great sadness !!


 சென்னை சேப்பாக்கம்.திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜெ.அன்பழகன்.வயது 61. இவர் தியாகராயநகரில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக கடந்த 2ம் தேதியன்று கொரோனா, மூச்சுத் திணறலுடன்  சென்னை குரோம்பேட்டையில் உள்ள திமுக பிரமுகருக்கு சொந்தமான ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜெ.அன்பழகனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அவர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைச்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Murder Coroner: DMK MLA J.Appahankal DMK siblings in great sadness !!

இந்த நிலையில், திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் "வெண்டிலேட்டர்" மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு வெண்டிலேட்டர் கருவி மூலம் 80 சதவீத ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாவும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் மருத்துவ அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.

Murder Coroner: DMK MLA J.Appahankal DMK siblings in great sadness !!
கொரோனா சென்னையை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது.திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்து வரும் அன்பழகன் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பது அவருக்கு மிகுந்த மனவேதனையை கொடுத்துள்ளதாக உடன்பிறப்புகள் தெரிவிக்கின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios