திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி உள்பட 7 பேரை கொலை வழக்கில் இருந்து பொன்னேரி நீதிமன்றம் விடுவித்துள்ளது. 

கடந்த திமுக ஆட்சியில் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்பட்டு, மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றியவர் கே.பி.பி.சாமி. தற்போது திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக உள்ளார். இவரது சொந்த ஊரான கேவிகே குப்பத்தை சேர்ந்த செல்லத்துரை என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு மாயமானார். 

இதனையடுத்து, சுனாமி நிவாரண நிதி பிரிப்பதில் என் கணவருக்கும், அப்போது அமைச்சராக இருந்த கே.பி.பி.சாமிக்கும் கடும் தகராறு ஏற்பட்டது. எனவே, அவர்தான் என் கணவரைக் கொலை செய்திருப்பார் என்று நினைக்கிறேன்..." என, சென்னை ஆணையர் அலுவலகத்தில் காணாமல் போன மீனவர்களின் மனைவிகள் தனித்தனியாக புகார் மனு கொடுத்தனர். அப்போது, திமுக ஆட்சியில் இருந்ததால் இந்த வழக்கை கண்டுகொள்ளவில்லை. 

இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, செல்லதுரை காணாமல் போன வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. கே.பி.பி.சாமி அவரது சகோதரர்கள் கே.பி.சங்கர், சொக்கலிங்கம் உட்பட 7 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் 6 மாதத்திற்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கு பொன்னேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை முடிந்து பொன்னேரி 4-வது கூடுதல் மாவட்ட  நீதிபதி   பூங்குழலி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் கே.பி.பி.சாமியும், அவரது சகோதரர் கே.பி.சங்கர் மற்றும் 6 பேரும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார்.