குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக முஸ்லிம்களை தூண்டிவிட்டு, திமுக செய்துவரும் பித்தலாட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக போராட்டம் நடத்தியது. இதில் தமிழ் நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாஅத் தலைவர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு பேசினார். 

நமது உள்துறை அமைச்சர் ஒரு வாக்குறுதி தந்து இருக்கிறார். முஸ்லிம்கள் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் கடுகளவும் பயப்படத் தேவையில்லை என்று வாக்குறுதி அளித்துள்ளார். இது ஏதோ சாதாரணமாக பொதுக்கூட்டத்தில் அளித்த வாக்குறுதி அல்ல. பாராளுமன்றத்தில் நமது உள்துறை அமைச்சர் அளித்த வாக்குறுதி. 

முஸ்லிம்கள் இந்த நாட்டின் குடிமக்கள். அவர்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை. காங்கிரஸ் அவர்களை பயமுறுத்தாமல் விலகி இருங்கள் என்று சொன்னார். இந்த வாக்குறுதியை நம்பாமல் இந்த சட்டத்தை எதிர்ப்பது என்பது, இந்திய தேசத்தை எதிர்க்கக் கூடிய செயல். ஒரு உண்மையான முஸ்லீம் யாருக்கும் கட்டுப்பட வேண்டும் தெரியுமா? இந்த தேசத்தின் அமீருக்குக் கட்டுப்பட வேண்டும். இந்த தேசத்தின் அமீராக இருக்கக்கூடியவர் நம்முடைய பாரத பிரதமர் மோடி ஆகும்.

அவருடைய எந்த பேச்சில் எப்போதாவது தான் ஒரு இந்துக்களுக்கான பிரதமர் என்று வெளிப்படுத்தி இருக்கிறாரா? அல்லது இந்துக்களுக்கான உரிமையை மட்டும் தான் நான் தருவேன் என்று சொல்லியிருக்கிறாரா? காங்கிரஸ் வேண்டுமானால் முஸ்லிம்களுடைய மேடையில் ஏறும் போது இது முஸ்லிம்களுக்கான கட்சி என்று நாடகமாடும். திமுக வேண்டுமானால் மேடை கேப்ப நாடகமாடும்.

 

பாரதப் பிரதமர், ஒரு வாக்குறுதி கொடுத்தார்கள். அது என்ன வாக்குறுதி? அனைவருக்குமான முன்னேற்றம். அனைவருக்குமான வளம். இந்த தேச முன்னேற்றத்தில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. இங்கு இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிக்க நினைத்தால் உங்களுடைய நோக்கம் தவிடுபொடியாகும்’’எனப்பேசி இருந்தார் வேலூர் இப்ராஹிம். 

இந்நிலையில் அவர் மீது மூன்றாண்டுகளுக்கு முன் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவில், தான் அல்லாவுக்கு மட்டுமே பயப்படுபவன். என்மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளது முன்பே காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் தெரியும். அப்படி இருந்தும் அவர்கள் என்னை பாதுகாக்காமல் விட்டுவிட்டனர். அதுவும் உளவுத்துறை முன்பே என்னை தாக்கியுள்ளனர் என அந்த வீடியோவில் உயிருக்கு போராடியபடி ரத்தம் வடிந்த நிலையில் இப்ராஹிம் பேசியுள்ளார்.