திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் நேற்றைய பதிப்பில், நடிகர் ரஜினி குறித்து கட்டுரை வெளியானது. அண்மைக் காலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமமுக துணை பொது செயலாளர் தினகரன், பிரதமர் மோடி என விமர்சித்து செய்தி வெளியான நிலையில், நேற்றைய முரசொலியில், நடிகர் ரஜினியை விமர்சித்து கட்டுரை வெளியானது. 

ரஜினியை அவரது ரசிகர்கள் கேள்வி கேட்பது போன்று கட்டுரை வெளியானது. முரசொலியில் வெளியான இந்த கட்டுரையை ரஜினி ரசிகர்கள் படித்தது மட்டுமல்லாது செய்தி ஊடகங்கங்கள், சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவியது. முரசொலி இந்த கட்டுரையை வெளியிட காரணம் என்ன? ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டாரா என்று நம்பியிருந்த திமுக, 90 சதவிகிதம் கட்சிப் பணி முடிந்து விட்டதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று ரஜினி கூறியிருந்ததுதானாம். 

ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்று நம்பியிருந்த திமுக, அது உறுதி செய்யப்பட்டவுடன் ரஜினியை தாக்கத் தொடங்கியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால், திமுகவின் வாக்கு வங்கிக்கு ஆபத்து இருப்பதால் ரஜினியை திமுக அட்டாக் செய்ய தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

தனக்கு ஒரே போட்டியாளர் ரஜினிதான் என்று திமுக கருதுகிறதாம். அதனாலேயே ரஜினியை திமுக அட்டாக் செய்ய தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.