தமக்கு அன்பெனும் அமுதம் ஊட்டி ஆதரவு கரம் நீட்டிய தமிழ் பெருமக்களுக்குக்கும்,  அரசியலுக்கு அப்பாற்பட்டு முரசொலி பவளவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் முரசொலி பவளவிழா  கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் மற்றும் பத்திரிகை ஆசிரியர்கள்  உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். மேலும்  எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில்  முரசொலி பவளவிழா குறித்து திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் முரசொலி பவளவிழாவைக் கண்டு விழிகள் மட்டும் விரிந்திடவில்லை. சுவாசப் பைகளும் விரிந்திடுகின்றன என தெரிவித்துள்ளார்.

தமக்கு அன்பெனும் அமுதம் ஊட்டி ஆதரவு கரம் நீட்டிய தமிழ் பெருமக்களுக்கு நன்றி. என் கடன் பணி செய்து கிடப்பதே.  அரசியலுக்கு அப்பாற்பட்டு முரசொலி பவளவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.