முரளியால் ஏற்பட்ட கலகலப்பு கிடக்கட்டும், அவரிடம் கத்தி வெட்டு ரேஞ்சுக்கு எடப்பாடி டீமை பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, அவர் சொன்ன பதில்தான் இப்போ செம்ம ஹாட். 


கோயமுத்தூரில் நடந்த பி.ஜே.பி. இளைஞரணியின் ‘யூத் டவுன்ஹால்’ நிகழ்வில் சமீபத்தில் கலந்து கொண்டாராம் முரளிதர ராவ். அப்போது தான் வழங்கிய ஸ்பெஷல் பேட்டி ஒன்றில் ”எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு கொடுக்கும் ரெண்டாயிரம் ரூபாயை ‘தேர்தலுக்கான சட்டப்பூர்வமான லஞ்சம்!’ என்று விமர்சனம் செய்கிறார்களே?” என்று கேட்கப்பட்டிருக்கிறது. 

உடனே சில நொடிகள் யோசித்த முரளி....”தேர்தல் கமிஷன் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என எல்லா கட்சிகளின் கண்களிலும் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ‘தமிழக அரசு சட்டப்பூர்வமான லஞ்சம் கொடுக்கிறது’ என்று சொன்னால் எவன் நம்புவான்?

ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் உயரக்கூடாது! என்று நினைக்கும் கட்சிகள்தான் இந்த நல்ல திட்டத்தை விமர்சனம் செய்யுமே தவிர மக்கள் இந்த திட்டத்தை தவறாக பார்க்கவில்லை. இந்த திட்டத்தை தடுக்க நினைப்பவர்களை மக்கள் வெறுப்பார்கள்.” என்று எடப்பாடியாரைன் ஓஹோவென தூக்கி வைத்துப் பேசியிருக்கிறார். 

இந்த பதிலை கேட்டு டென்ஷனான தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள், ’கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. அரசின் திட்டம் இது அப்படிங்கிறதாலே அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி, பருப்பு பதில்! கொடுத்திருக்கிறார் ராவ். ஒருவேளை கர்நாடக அல்லது கேரள அரசாங்கம் இந்த வேலையை பண்ணிக்கொண்டு இருந்தால் ’லஞ்சம்! லஞ்சம்!’ன்னு குய்யோ முறையோன்னு கத்தியிருப்பார். 

இது கேவலமான அரசியல்.” என்று வெளுக்கின்றனர். 
யூ டூ முரளி!?