Asianet News TamilAsianet News Tamil

பாஜகவின் நூறுநாள் சாதனை என்ன தெரியுமா ? பொருளாதாரத்தை சீரழித்ததுதான்…. வெளுத்து வாங்கிய ஸ்டாலின் !!

இந்தியப் பொருளாதாரத்தை சீரழித்தது  மட்டுமே பா.ஜ.கவின் 100 நாள்  சாதனை என திருவண்ணாமலையில் நடைபெற்ற முப்பெரும்  விழாவில்  திமுக தலைவர்  மு.க ஸ்டாலின் மிகக் கடுமையாக குற்றம்சாட்டினார்.

Muperu vizha stalin speech
Author
Thiruvannamalai, First Published Sep 16, 2019, 7:53 AM IST

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், தந்தை பெரியார் பிறந்த நாள், தி.மு.க தொடங்கப்பட்ட நாள் இணைந்து முப்பெரும் விழாவாக ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு திருவண்ணாமலை கலைஞர் திடலில்  முப்பெரும் விழா 2019 நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின், தி.மு.க தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆனதை நாம் கொண்டாடி வருகிறோம். முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி செம்மொழி நாளாக கடைபிடிக்க வேண்டும்.

Muperu vizha stalin speech

தி.மு.க முப்பெரும் விழாவில் பேனர் வைக்காததற்கு நன்றி; இனி தி.மு.க.வின் எந்தவிழாவிற்கும் யாரும் பேனர் வைக்கக்கூடாது. விளம்பரத்திற்காக வைக்கப்படும் பேனர்கள் மக்களின் வெறுப்புக்கு உள்ளாகும் வகையில் அமைந்துவிடுகின்றன.

தமிழகத்தில் பா.ஜ.க.வின் பினாமி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் அ.தி.மு.க அமைச்சர்கள் இன்ப சுற்றுலா சென்று வருகின்றனர். வெளிநாட்டு முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட அ.தி.மு.க அரசுக்கு துணிவு உண்டா? என கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சிக்கு மத்திய பா.ஜ.க அரசு முட்டுக்கொடுத்து வருகிறது. மத்திய அரசின் 100 நாட்களில் பொருளாதாரத்தை 5% ஆக குறைத்ததுதான் மிகப் பெரும் சாதனை என கிண்டல் பண்ணினார்.

Muperu vizha stalin speech

இந்தி குறித்த மோடி, அமித்ஷாவின் கருத்து இந்தி பேசாத மக்கள் மனதில் தேள் கொட்டியது போல் உள்ளது. இந்தியை திணிக்கும் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் தாய்மொழி இந்தி அல்ல. இந்தி திணிப்பை எதிர்த்து எத்தகைய தியாகத்தையும் செய்ய திமுக தயாராக உள்ளது. இந்தி மொழி போராட்டத்திற்கு அனைவரும் தயாராவோம். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்  என ஸ்டாலின் பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios