Asianet News TamilAsianet News Tamil

தலைவரானதும் அதிரடி காட்டும் ஸ்டாலின்! தெறித்து ஓடிவரும் முன்னாள் நிர்வாகிகள்!

தேமுதிகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் இணைகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை காலை 11 மணிக்கு முல்லைவேந்தன் இணைய உள்ளார்.

Mullaivendhan Again join DMK
Author
Chennai, First Published Aug 30, 2018, 3:58 PM IST

தேமுதிகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் இணைகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை காலை 11 மணிக்கு முல்லைவேந்தன் இணைய உள்ளார். தி.மு.க-வின் தருமபுரி மாவட்ட கழகச் செயலாளராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர் முல்லைவேந்தன். கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, கட்சியின் வெற்றிக்குத் துரோகம் செய்ததால் அதிரடியாக பொதுச்செயலாளர் அன்பழகன் விளக்கம் அளிக்கும் படி நோட்டீஸ் அனுப்பினார். Mullaivendhan Again join DMK

ஆனால் நோட்டீஸிக்கு முல்லைவேந்தன் விளக்கம் அளிக்கவில்லை. ஆகையால் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். 2015-ம் ஆண்டு தேமுதிகவில் இணைந்து பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார். பிறகு தேமுதிகவில் சற்று ஒதுங்கியே இருந்து வந்தார். Mullaivendhan Again join DMK

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி முல்லைவேந்தன் 2 முறை ஸ்டாலினிடம் நலம் விசாரித்து சென்றுள்ளார். மேலும், கருணாநிதி மறைவுக்குப் பிறகு கோபாலபுரம் இல்லத்துக்கும் ராஜாஜி ஹாலுக்கும் முல்லைவேந்தன் சென்று அஞ்சலி செலுத்தினார். Mullaivendhan Again join DMK

இந்நிலையில் திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் தனது அதிரடி அரசியலை தொடங்கியுள்ளார். திமுக கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதன் எதிரொலியாக முல்லைவேந்தனை தி.மு.க.வில் சேர்க்க தருமபுரி மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணியை நேரில் சென்று அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நாளை காலை 11 மணிக்கு முல்லைவேந்தன் இணைய உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios